செமாந்தான் எம்ஆர்டி நிலையம்
KG14 செமாந்தான் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
செமாந்தான் எம்ஆர்டி நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Semantan MRT Station Stesen Semantan MRT 士曼丹 | |||||||||||||||
| அமைவிடம் | டாமன்சாரா அயிட்ஸ் கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°9′4.05″N 101°39′55.75″E / 3.1511250°N 101.6654861°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 9 காஜாங் | |||||||||||||||
| நடைமேடை | 2 பக்க நடை மேடைகள் | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலை | |||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG14 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG14 (MRT) 16 திசம்பர் 2016 | |||||||||||||||
| முந்தைய பெயர்கள் | Manulife–Semantan (2017–2023) | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
செமாந்தான் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Semantan MRT Station; மலாய்: Stesen MRT Semantan) என்பது மலேசியா, கோலாலம்பூர், டாமன்சாரா அயிட்ஸ் பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் திசம்பர் 16, 2016 அன்று திறக்கப்பட்டது.
செமாந்தான் எம்ஆர்டி நிலையம், மலேசியாவிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் (ஐ.நா.) அலுவலகம்; மற்றும் டுங்குன் சாலை (Jalan Dungun) பகுதிக்கு அருகிலுள்ள இசுபிரிண்ட் விரைவுச்சாலையின் செமாந்தான் மாற்றுச் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் முதல் கட்டக் கட்டுமானத்தின் போது, செமாந்தான் எம்ஆர்டி நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் இதே செமாந்தான் நிலையத்திலேயே இறங்க வேண்டிய தெற்கு முனையமாக இந்த நிலையம் விளங்கியது. அந்தக் கட்டத்தில் இந்த நிலையத்திற்கு வரும் தொடருந்துகள், சுல்தான் அப்துல் ஆலிம் சாலைக்கு மேலே உள்ள குறுக்குவெட்டுப் பாதையில் திரும்பி, சுங்கை பூலோவை நோக்கித் திரும்பிச் செல்லும். சூலை 17, 2017 அன்று இரண்டாம் கட்டச் செயல்பாட்டிற்குப் பின்னர், செமாந்தான் எம்ஆர்டி நிலையத்தின் தெற்கு முனையமாக காஜாங் தொடருந்து நிலையம் மாறியது.
2017 ஆகத்து 21-ஆம் தேதி இந்த நிலையம் மனுலைப்-செமாந்தான் நிலையம் (Manulife-Semantan) என மறுபெயரிடப்பட்டது. அப்போது நிலையத்தின் பெயரிடும் உரிமைக்கான 5 ஆண்டு ஒப்பந்தத்தை மனுலைப் எனும் கனடிய நிதி நிறுவனம் பெற்றது.[1] இருப்பினும், இந்த நிலையத்திற்கு பெயரிடும் உரிமை திசம்பர் 1, 2023 அன்று முற்றுப் பெற்றது.[2]
காஜாங் வழித்தடம்
[தொகு]காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[3]
எம்ஆர்டி நிறுவனம்
[தொகு]இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு சொந்தமானது; மற்றும் ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் சேவையின் ஒரு பகுதியாகவும்; ஒருங்கிணைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும் இயக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 9; வழித்தடத்தின் நிறம் பச்சை என பொறிக்கப்பட்டு உள்ளது. எம்ஆர்டி நிறுவனத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று தொடருந்து வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]
நிலைய அமைப்பு
[தொகு]| L2 | நடைமேடை தளம் | பக்க நடைமேடை |
| நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் KG35 (→) | ||
| நடைமேடை 2 9 காஜாங் (←) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
| பக்க நடைமேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள் |
| G | தரை தளம் | நுழைவாயில் A; நுழைவாயில் B; பேருந்து நிறுத்தம், வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள் |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | செமாந்தான் சாலை - தெற்குப் பகுதி | டாமன்சாரா இண்டா சாலை: பேருந்து சேவைகள், கார் நிறுத்துமிடம் | |
| B | செமாந்தான் சாலை - வடக்குப் பகுதி | டுங்குன் சாலை: பேருந்து சேவைகள், மனுலைப் கோபுரம், விசுமா யூஓஏ டாமன்சாரா; தி பைவ் | |
பேருந்து சேவைகள்
[தொகு] KG13 பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தின் நுழைவாயில் B மூடப்பட்டதால், டாமன்சாரா வழித்தடத்தின்
T818
T819
T820
T852 பேருந்துகள் மறு அறிவிப்பு வரும் வரை இந்த செமாந்தான் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இயக்கப்படும்.[5]
| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| KG14 செமாந்தான் எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் B |
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் | டுங்குன் சாலை கெலெங்கான் சாலை செமாந்தான் சாலை துவாங்கு அப்துல் ஆலிம் சாலை டூத்தாமாஸ் சாலை 1 சுல்தான் அஜி அகமது சா சாலை | ||
| KJ16 பங்சார் எல்ஆர்டி நிலையம் | பூசாட் பண்டார் டாமன்சாரா டுங்குன் சாலை |
பங்சார் உத்தாமா சாலை 1 மாரோப் சாலை இசுபிரிண்ட் விரைவுச்சாலை டுங்குன் சாலை செமாந்தான் எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் B கெலெங்கான் சாலை தாமான் லேலா சாலை மாரோப் சாலை பங்சார் சாலை |
காட்சியகம்
[தொகு]செமாந்தான் எம்ஆர்டி நிலையம் (2023 - 2024)
மேலும் காண்க
[தொகு]- இசுபிரிண்ட் விரைவுச்சாலை
- டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
- பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
- யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manulife granted naming rights for Semantan MRT station | New Straits Times". 22 August 2017.
- ↑ "Manulife officiates Manulife Semantan MRT station" (PDF). Archived from the original (PDF) on 2022-07-25.
- ↑ Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy.
- ↑ "Phileo Damansara MRT station near Menara STAR, HQ of The Star newspaper". klia2.info. 29 January 2019. Retrieved 13 September 2025.
- ↑ https://www.facebook.com/124778030879436/posts/4674075142616346/
- ↑ RapidKL Bus Route T821
- ↑ RapidKL Bus Route T850
