செப் பங்காசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப் பங்காசு
பிறப்புசெபுனிசா பங்காசு
7 March 1982 (1982-03-07) (வயது 41)
கோகத், கைபர் பக்துன்வா மாகாணம்,பாக்கித்தான்
பணிபாடகர்-பாடலாசிரியர்
உறவினர்கள்அனியா அசுலம் (உறவினர்)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்பாப், சூபி
இசைத்துறையில்2007–தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்

செபுனிசா பங்காசு (Zebunisa Bangash) (பிறப்பு மார்ச் 7, 1982) பஞ்சாபின் லாகூரைச் சேர்ந்த ஒரு பாக்கித்தான் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். இவரது குடும்பம் முதலில் கைபர் பக்துன்வாவைச் சேர்ந்தது. இவரது தனி வாழ்க்கையைத் தவிர, இவர் தனது உறவினர் அனியா அசுலமுடன் சேர்ந்து "செப் மற்றும் அனியா" இசைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.[1]

தொழில்[தொகு]

இவர் தனது உறவினர் அனியா அசுலமுடன் சேர்ந்து "செப் மற்றும் அனியா" என்ற பெயரில் ஒரு இசை இரட்டையராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] 2008 இல் இவர்கள் "சுப்" என்ற தங்கள் முதல் தொகுப்பை வெளியிட்டனர்.[3] 20013 இல், மதராஸ் கஃபே படத்திற்காக செப் ஒரு பாடலை பாடி பாலிவுட்டில் அறிமுகமானார். தனது படிப்புக்காக அனியா கனடா சென்ற பிறகு இவர் தனது தனி வாழ்க்கையை தொடர்ந்தார். ஹைவே (2014), பின் ராய் (2015), மான்டோ (2015), ஹோ மன் ஜஹான் (2016), பிதூர் (2016), லாலா பேகம் (2016), வெர்னா (2017), பர்வாஸ் ஹாய் ஜுனூன் (2018 ), பாஜி பரே ஹட் லவ்(2019) மற்றும் சூப்பர் ஸ்டார் (2019 ) போன்ற படங்களில் இவர் பாடல்களை பாடினார்.[4] [5] 2016ஆம் ஆண்டில் சிறந்த இசை மற்றும் ஹம் விருதுக்கான லக்ஸ் ஸ்டைல் விருதை வென்ற தியார்-இ-தில் என்ற தொலைக்காட்சித் தொடரின் தலைப்புப் பாடலை இவர் பாடினார்.[6]

இவர், பைமோனா, சுப், சால் தியாய், பீபி சனம் ஜானம், டான் டோலே உட்பட பல பல பாடல்களை கோக் ஸ்டுடியோவுக்காகப் பாடியுள்ளார்.[7] பின்னர் இவர் பெப்சி பேட்டில் ஆஃப் தி பேண்ட் என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது பருவத்தில் ஒரு பாடலை நிகழ்த்தினார்.[8]2019ஆம் ஆண்டில், இவர் கோக்ஸ்டுடியோ 12 இல் காஷ்மீர் வாழ்த்துப் பாடலான "ரோஷே" வை பாடினார். [9]

இவர் விருது பெற்ற பாலிவுட் படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றிய முதல் பாக்கித்தான் கலைஞராவார்.[10] லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். பிரகாஷ் ஜா தயாரித்திருந்த இப்படத்தின் இந்தியாவில் இசை வெளியீட்டு நிறுவனமான டி-சீரிஸால் அதன் இசை வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் பிலிம் டி பெம்ஸ் விழா, பிரான்ஸ் 2017, கிளாஸ்கோ திரைப்பட விழா 2017, லண்டன் ஆசிய திரைப்பட விருதுகள் 2017, மினியாபோலிஸ் செயின்ட் பால் சர்வதேச விழா 2017, மும்பை திரைப்பட விழா 2016, திரை விருதுகள், இந்தியா 2018 மற்றும் தோக்கியோ சர்வதேச திரைப்பட விழா 2017. உட்பட பல விருதுகளை வென்றது.[11][12]

கடந்த சில வருடங்களாக, இவர் பல நூற்றாண்டுகள் பழமையான தெஹ்லி கரானாவின் தலைவரான உஸ்தாத் நசீருதீன் சாமியின் பயிற்சியின் கீழ் இருந்தார். இவர் தற்போது உஸ்தாத் சாமியின் ஆவணப்படப் பதிவில் கிராமி விருது வென்ற தயாரிப்பாளர் இயன் பிரென்னனுடன் கயல் மற்றும் கவ்வாலியின் மூதாதையர் மரபு மற்றும் அஸ்ரத் அமீர் குஸ்ரோவின் காலத்தின் பரம்பரையை ஆராய்கிறார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் 5 நவம்பர் 2017 இல் திருமணம் செய்து கொண்டார். [13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Rehman, Maliha (28 August 2016). "FirstPerson: "Music is not a competitive sport" – Zeb Bangash". http://www.dawn.com/news/1280322. 
 2. "Zeb and Haniya- The Band" இம் மூலத்தில் இருந்து 1 January 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080101032137/http://www.zebandhaniya.com/theband.html. 
 3. "Pakistani Music Channel review" இம் மூலத்தில் இருந்து 2012-02-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120223072832/http://www.muziq.net/songs/Zeb-and-Haniya/Chup/. 
 4. Faisal, Sabeen (22 October 2016). "In conversation with Zeb Bangash, the voice of 'Ho Mann Jahaan'". http://www.hipinpakistan.com/news/1148154. 
 5. "'Fitoor' experience was special for me: Zeb Bangash". 26 January 2016. http://tribune.com.pk/story/1034616/fitoor-experience-was-special-for-me-zeb-bangash/. 
 6. Sabeeh, Maheen (23 February 2016). "Haniya is my sister. I have to support every decision she makes…" இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160918223202/http://tns.thenews.com.pk/zeb-of-zeb-and-haniya-interview/#.V8qQeTTXfCQ. 
 7. Salahuddin, Zahra (14 August 2016). "Coke Studio review: Episode 1 saved by Zeb Bangash's lovely ballad". http://images.dawn.com/news/1176047. 
 8. Ahmed Sarym (28 August 2017). "The exploitation in Pakistan's music industry is really appalling: Zeb Bangash". https://images.dawn.com/news/1178267. 
 9. Maheen Sabeeh (24 October 2019). "Coke Studio second episode to drop tomorrow". https://www.thenews.com.pk/magazine/instep-today/545831-. 
 10. "Zeb Bangash in Concert at Yale | Yale MacMillan Center South Asian Studies". https://southasia.macmillan.yale.edu/event/zeb-bangash-concert-yale. 
 11. "Munna Micheal Down On Monday - Lipstick Holds". http://www.boxofficeindia.com/report-details.php?articleid=3105. 
 12. "Munna Micheal And Lipstick Under Burkha Day Five Business". http://www.boxofficeindia.com/report-details.php?articleid=3107. 
 13. "It's official: Zeb Bangash ties the knot!". DAWN Images. 7 November 2017. https://images.dawn.com/news/1178776/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்_பங்காசு&oldid=3555559" இருந்து மீள்விக்கப்பட்டது