உள்ளடக்கத்துக்குச் செல்

செப்ரோலு, குண்டூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செப்ரோலு (Chebrolu) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது தெனாலி வருவாய் பிரிவில் செப்ரோலு மண்டலத்தின் தலைமையகமும் ஆகும். [1] இது ஒரு காலத்தில் பௌத்த தளமாகவும், காகாதிய வம்சத்தின் பிராந்திய தலைநகராகவும் இருந்தது. தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளில் சாதவாகர் மற்றும் இக்ஷவாகு காலத்தின் புத்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சொற்பிறப்பு

[தொகு]

சாதவாகன வம்சத்தின் போது, இந்த பகுதி தாம்பிரபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [2] சதுர்முகபுரம் என்பதும் நகரத்திற்கு மற்றொரு பெயராகும். இது சிந்தப்பள்ளியின் ஜமீன்தாரான இராஜா வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவரால் உருவாக்கப்பட்டது. [3]

வரலாறு

[தொகு]
செப்ரோலுவில் உள்ள சதுர்முக பிரம்மா கோயில்

இந்த இடத்தில் சுடப்பட்ட களிமண் சிலைகளும், உரோமானிய பேரரசர் கான்ஸ்டன்டைன் தொடர்பான இரண்டு நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சாளுக்கிய பீமனின் காலத்தில் (கி.பி 892-922) பல கோவில்கள் இங்கு கட்டப்பட்டுள்ளன. [4] வேலநாடு சோடர்கள் போன்ற சோழர்களின் பல கல்வெட்டுகள் காணப்பட்ட இடமாகவும் இது இருந்தது. கீழைச் சாளுக்கியர்களைச் சேர்ந்த சத்தியாசிரய சாளுக்கிய சோழர்களின்பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக தனது தளபதி பயா நம்பி தலைமையில் ஒரு இராணுவத்தை அனுப்பினார். தளபதி தெற்கிலிருந்து வெங்கியில் நுழைந்து, தரணிக்கோட்டைமற்றும் யனமதாலா கோட்டைகளைக் கைப்பற்றி, செப்ரோலுவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு செப்ரோலுவில் சதுர்முக பிரம்மனுக்கு ஒரு கோவிலைக் கட்டியும், மற்ற கோயில்களை பலப்படுத்தவும் செய்தார். [5] புகழ்பெற்ற நாகேசுவர சுவாமி கோயில் மற்றும் காளிகோபுரம் ஆகியவை தேவபக்துனி சகோதரர்கள் காந்தண்ணா மற்றும் முர்தண்ணா ஆகியோரால் கட்டப்பட்டுள்ளன. ஆந்திராவில் யாகோபின் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே யூத ஜெப ஆலயத்தை செப்ரோலு கொண்டுள்ளது. [6] ஜெயபாவின் ஒரு கல்வெட்டில் கி.பி 1213 இல் அனந்த ஜினாவின் சமண கோவிலைக் குறிப்பிடுகிறார். [7]

செப்ரோலுவில் உள்ள இராஜ்யலட்சுமி கோயில்

தொல்பொருள் அகழ்வாராய்ச்சி

[தொகு]

செப்ரோலுவில் சாதவாகன கால நாணயங்களின் ஒரு பெரிய தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டது. நாணயங்கள் கப்பல் உருவத்தை இரண்டு பாய்மரக் கம்பங்களை தாங்கியபடி காணப்படுகின்றன. [8] நாகேசுவரர் கோயிலின் கோபுரத்தின் முன் இரண்டு தூண்களில் ஜெயபாவின் கல்வெட்டு (1231   கி.பி) கூனர்கள் மற்றும் தெற்கு மன்னர்களுக்கு இடையிலான உறவை விவரிக்கிறது. இது மதுரா நாட்டின் அரசன் பாங்கோலா மற்றும் விதேக நாட்டின் அரசன் கம்மிரா, கூனர்கள் மற்றும் காசி மன்னர் அவரது வாசலில் காத்திருப்பதைக் குறிக்கிறது. [9]

நிலவியல்

[தொகு]

செப்ரோலு 15 ° 58′N 80 ° 30′ கிழக்கில் அமைந்துள்ளது. இது 791 ஹெக்டேர் (1,950 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.

புள்ளி விவரங்கள்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செப்ரோலுவில் 3,110 வீடுகளுடன் 11,626 மக்கள் தொகை இருந்தது. மொத்த மக்கள் தொகையில், 5,728 ஆண்கள் மற்றும் 5,898 பெண்கள் இருந்தனர். ஒரு பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1030 பெண்கள் இருந்தனர். 1,231 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 606 சிறுவர்கள் மற்றும் 625 பெண்கள் அடங்குவர். அதாவது 1000 க்கு 1031 என்ற விகிதம். 7,267 கல்வியாளர்களுடன் சராசரி கல்வியறிவு விகிதம் 69.91 சதவீதமாக உள்ளது.

கலாச்சாரம்

[தொகு]

செப்ரோலுவில் 100 க்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் உள்ளன. அவற்றில் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் உள்ளது. பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் மிகச் சில மற்றும் ஆரம்பகால கோயில்களில் ஒன்றாகும் பிரம்மேசுஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். [10]

குறிப்புகள்

[தொகு]
  1. "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 662–663. பார்க்கப்பட்ட நாள் 4 June 2019.
  2. Jonathan, P.Samuel (27 September 2014). "Buddhist artefacts discovered in Chebrolu". The Hindu (Chebrolu). http://www.thehindu.com/news/cities/Vijayawada/buddhist-artefacts-discovered-in-chebrolu/article6450273.ece. பார்த்த நாள்: 19 January 2015. 
  3. Mackenzie, Gordon (1883). A Manual of the Kistna District, in the Presidency of Madras: Compiled for the Government of Madras. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
  4. Andhra Pradesh Government Archaeological Series, Issue 50; Government of Andhra Pradesh, Hyderabad, 1978, p. 17
  5. Indian Monuments by N.S. Ramaswami,Abhinav Publications, 1971; p.115
  6. Jews and India: Perceptions and Image by Yulia Egorova, Routlege, 2008; p. 119
  7. Jainism in South India by P.M. Joseph, International School of Dravidian Linguistics, 1997; p.59
  8. Explaining Monetary and Financial Innovation by Peter Bernholz and Roland Vaubel, 2014, Springer; p.72
  9. Mongolia-India Relations by O. Nyamdavaa, Pentagon Press, 2003; p.5
  10. The Foundations of Living Faiths: An Introduction to Comparative Religion, Volume 1, by H. Bhattacharya, Motilal Banarsidas Publishers, New Delhi, 1994 p. 25