செப்புச் சுருளேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்ரான் சாக்கடல் சுருள் ஏடுகளின் பகுதி
கும்ரான் சாக்கடல் சுருள் ஏடுகளின் பகுதி
செப்புச் சுருளேடுகளின் பகுதியின் நகல்

செப்புச் சுருளேடுகள் (Copper Scroll) இஸ்ரேல் நாட்டின் மேற்குக் கரையில், சாக்கடலை ஒட்டி அமைந்த கும்ரான் மலையின் குகை எண் 3-இல் கண்டெடுக்கப்பட்டது.[1] இதே பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தோல் மற்றும் பாபிரஸ் காகிதம் ஆகியவற்றாலான சாக்கடல் சுருள் ஏடுகளிலிருந்து இந்த செப்புச் சுருளேடுகள் முற்றிலும் மாறுபட்டது. செப்புச் சுருளேடுகளில் 99% தாமிரம் மற்றும் 1% தகரம் கலந்துள்ளது. இந்த செப்புச் சுருள்கள் 8 அடி (240 செமீ) நீளம் கொண்ட ஒரு ஒற்றைச் சுருளில் இரண்டு பிரிக்கப்பட்ட பகுதிகளாக இருந்தது. சாக்கடல் சுருள் ஏடுகள் போன்று, செப்புச் சுருளேடுகள் ஒரு இலக்கியப் படைப்பு அல்ல; ஆனால் பல்வேறு இடங்களில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் புதைக்கப்பட்ட அல்லது மறைத்து வைக்கப்பட்ட 64 இடங்களின் பட்டியல் கொண்டுள்ளது.[2] செப்புச் சுருள்களின் எழுத்துக்கலை, எழுத்துகளின் வடிவங்கள் கிபி 50 - 100 இடைப்பட்டகாலம் ஆகும். இந்த செப்புச் சுருளேடுகள் தற்போது ஜோர்டான் நாட்டின் தலைநகரான் அம்மான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3]

காலம்[தொகு]

இச்செப்புச் சுருளேடுகளின் காலம் கிபி 25–75 என்றும்[4] , கிபி 70–135 என்றும் தொல் பொருள் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மொழி மற்றும் எழுத்து வடிவம்[தொகு]

இது பிற சாக்கடல் சுருளேடுகளில் உள்ள எழுத்து வடிவங்களிலிருந்து வேறுபட்டுள்ளது. இதன் எழுத்து வடிவம் மிஷ்னைக் எபிரேய மொழியை ஒத்துள்ளது. இருப்பினும் இது விவிலியம் வாசககள் ஏதும் இல்லை.[5] இதன் எழுத்து வரைவு அசாதாரணமானது; சுத்தியல் மற்றும் உளி கொண்டு தாமிரத்தில் எழுதப்பட்டதன் விளைவாக இது எழுத்துமுறை அம்சங்களைக் கொண்டுள்ளது. இருப்பிடப் பெயர்களில் ஏழுக்குப் பின் இரண்டு அல்லது மூன்று கிரேக்க எழுத்துக்கள் ஒரு குழுவாக இருக்கும் என்ற முரண்பாடும் உள்ளது. மேலும், சுருள் குறிக்குள் உள்ள "பிரிவுகள்" கிரேக்கக் கோவிலான அப்பல்லோவிலிருந்து கிரேக்க கருத்துக்களுக்கு இணையான புதிரானவையாக உள்ளது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. A Treasure Quest in the Copper Scroll from Qumran
  2. "The Bible and Interpretation – On the Insignificance and the Abuse of the Copper Scroll". Bibleinterp.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
  3. "Новости – Библейский альманах "Скрижали"". Luhot.ru. 2013-07-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
  4. Al Wolters, article on the "Copper Scroll", in Schiffman, 2000a (Vol.2), p.146.
  5. Lundberg, Marilyn J. "The Copper Scroll (3Q15)". West Semitic Research Project. Archived from the original on 3 March 2011. பார்க்கப்பட்ட நாள் 4 April 2011.
  6. Milik, J.T (September 1956). "The Copper Document from Cave III, Qumran". The Biblical Archaeologist 19 (3): 60–64. doi:10.2307/3209219. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்புச்_சுருளேடுகள்&oldid=3931424" இலிருந்து மீள்விக்கப்பட்டது