செப்பா
செப்பா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் செப்பா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°21′00″N 93°2′44″E / 27.35000°N 93.04556°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு காமெங் மாவட்டம் |
ஏற்றம் | 363 m (1,191 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,350 |
மொழிகள் - ஆங்கிலம், இந்தி மற்றும் பழங்குடி மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
790102 | 790102 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | AR |
மழை | 2,212 மில்லிமீட்டர்கள் (87.1 அங்) |
சராசரி கோடைக்கால வெப்பம் | 25 °C (77 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 9 °C (48 °F) |
இணையதளம் | https://eastkameng.nic.in/ |
செப்பா (Seppa), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு காமெங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடமேற்கே 208.கிலோ மீட்டர் தொலைவிலும், அசாம் மாநிலத்தின் தேஜ்பூருக்கு வடக்கே 188.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கமெங் ஆறு செப்பா நகரம் வழியாகப் பாய்கிறது.[1]
மக்கள் தொகைப் பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3,610 குடும்பங்கள் கொண்ட செப்பா பேரூராட்சியின் மக்கள் தொகை 18,350 ஆகும். அதில் 9,269 ஆண்கள் மற்றும் 9,081 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 18.46% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 980 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77.10% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 79.58% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 23.55%, இசுலாமியர் 1.91%, பௌத்தர்கள் 1.28%, கிறித்தவர்கள் 42.92% மற்றும் பிற சமயத்தினர் 30.25% வீதம் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ District Administration, Seppa, East Kameng at a Glance, Retrieved 10 May 2007 Seppa Helipad பரணிடப்பட்டது 10 திசம்பர் 2003 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seppa Town Population Census 2011