செப்டம்பர் 2019 - காலநிலைக்கான வேலைநிறுத்தங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்டம்பர் 2019 காலநிலை வேலைநிறுத்தங்கள்
தேதி20–27 செப்டம்பர் 2019
அமைவிடம்
உலகமெங்கிலும்
காரணம்புவி சூடாதல் தொடர்பான கவலைகள்
முறைகள்கண்டன ஆர்ப்பாட்டம்
வழிநடத்தியோர்
எண்ணிக்கை
ஆயிரக்கணக்கானோர் (உலகமெங்கும்)
செப்டம்பர் 20 அன்று நாடு வாரியாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை

செப்டம்பர் 2019 காலநிலை வேலைநிறுத்தங்கள், எதிர்காலத்திற்கான உலகளாவிய வாரம் என்றும் அழைக்கப்படுகின்றன. இது காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரும் தொடர்ச்சியான சர்வதேச வேலைநிறுத்தங்கள் ஆகும். வேலைநிறுத்தங்களின் முக்கிய தேதிகளில் செப்டம்பர் 20, இது ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்னும், செப்டம்பர் 27 ஐயும் சேர்த்ததாகும். [1] [2] பூமிக்கான வேலை நிறுத்தம் எனப்படும் உலகளாவிய பொது காலநிலை வேலைநிறுத்தத்திற்கு முன்மொழியப்பட்ட தினங்களாக செப்டம்பர் 20 முதல் 27 வரையிலான முழு வாரமும் அடங்கும். 150 நாடுகளில் 4500 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. [3] [4] இந்த நிகழ்வு காலநிலை இயக்கத்திற்கான பள்ளி வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாகும். இது ஸ்வீடிஷ் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கால் ஈர்க்கப்பட்டு உலகெங்கிலும் நடந்து வருகிறது. [5] [6]

20 செப்டம்பர் வேலைநிறுத்தங்கள் உலக வரலாற்றிலேயே காலநிலைக்காக நடைபெற்ற போராட்டங்களுள் மிகப்பெரிய போராட்டமாகத் தெரிகிறது.[7]இப்போராட்ட ஒருங்கிணப்பாளர்கள் உலகளவில் 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் இப்போராட்டத்தில் பங்குபெற்றுள்ளதாக அறிவிக்கின்றனர்.[7] இது ஜெருமனியில் இப்போராட்டத்தில் பங்கு பெற்ற 14 இலட்சம் பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கியதாகும்.[8] ஆசுதிரேலிய போராட்டத்தில் 300,000 எதிர்ப்பாளர்கள் பங்கெடுத்துள்ளனர். கூடுதலாக 300,000 மக்கள் பிரிட்டனில் நடந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும், நியூயார்க்கில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை தோராயமாக 250,000 இற்கும் அதிகமாக இருக்கும். 40 நாடுகளில் வாழும் 2,000 இற்கும் அதிகமான அறிவியலாளர்கள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.[9]

இந்தியா[தொகு]

இந்தியாவில், 14000 இற்கும் அதிகமானோர் உலகளாவிய காலநிலை பாதுகாப்பிற்கு ஆதரவான வேலைநிறுத்தங்களின் ஒரு பகுதியாக 26 வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டுள்ளார்கள். [10] புதுதில்லியில் 20000 மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் இந்தியாவில் காலநிலை அவசரநிலையைப் பிரகடனம் செய்ய வலியுறுத்தியுள்ளனர். ஒரு இந்திய சிந்தனை நிறுவனம், பல்வேறு இந்திய நகரங்களில் குடிநீர் இருப்பு தீர்ந்து போகும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.[11]


மேற்கோள்கள்[தொகு]

  1. Feller, Madison (17 September 2019). "The World Is Burning, and Teens Are Fighting: What to Know About the Global Climate Strike". Elle (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 September 2019.
  2. Lewis, Aimee (20 September 2019). "More than 100,000 have gathered in Melbourne as the world begins climate demonstrations". CNN. பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.
  3. Milman, Oliver (20 September 2019). "US to stage its largest ever climate strike: 'Somebody must sound the alarm'". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.
  4. Tollefson, Jeff (18 September 2019). "The hard truths of climate change — by the numbers". Nature. பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.
  5. "Inside The Youth-Led Plan To Pull Off The Biggest Climate Strike So Far" (in ஆங்கிலம்). MTV News. பார்க்கப்பட்ட நாள் 19 September 2019.
  6. Weise, Elizabeth (19 September 2019). "'It's our future that's at stake': US students plan to skip school Friday to fight climate 'emergency'". USA Today.
  7. 7.0 7.1 Barclay, Eliza; Resnick, Brian. "How big was the global climate strike? 4 million people, activists estimate". Vox. Archived from the original on 21 September 2019. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  8. "Rekordzahlen bei Klimademos: In Deutschland demonstrieren 1,4 Millionen Menschen". www.zdf.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  9. Conley, Julia (20 September 2019). ""Students Have Led and We Must Follow": Thousands of Scientists From 40 Nations Join Global Climate Strike". Buzz Flash. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  10. "Climate Strike: Governments Need To Act, Next Generation At Risk, Says Climate Change Campaigner". HuffPost India. 20 September 2019. Archived from the original on 20 September 2019. பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.
  11. Johnson, Jamie (20 September 2019). "Global climate strike protesters arrested as Britain braces for weekend of chaos". The Daily Telegraph. Archived from the original on 20 September 2019. பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.