செப்டம்பர் 2015 சந்திர கிரகணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முழு நிலவு மறைப்பு
28 செப்டம்பர், 2015
Ecliptic north top

பூமியின் நிழலூடாக, வலமிருந்து இடமாகக் (மேற்கிலிருந்து கிழக்காக) கடந்து செல்லும் நிலவின் தோற்றம்
காமா -0.3296
நிகழும் காலவளவு (hr:mn:sc)
முழுமை 1:11:55
பகுதி 3:19:52
புறநிழல் 5:10:41
தொடர்புகள் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்)
P1 0:11:47
U1 1:07:11
U2 2:11:10
மிகப்பெரியது 2:47:07
U3 3:23:05
U4 4:27:03
P4 5:22:27

மீனம் விண்மீன் குழாமில் பூமியின் நிழலை மேற்கிலிருந்து கிழக்காகக் (வலமிருந்து இடமாக) கடக்கும் நிலவின் தோற்றங்கள். நிலவின் இயக்கம் மணியளவில் காட்டப்பட்டுள்ளது. நிலவின் முழு மறைப்பு நிலைக்கு 16 பாகைகள் கிழக்கே, தோற்ற ஒளிப்பொலிவெண் 5.7 இல், யுரேனசைத் இருவிழிக்கருவியின் மூலம் காணலாம்.

செப்டம்பர் 2015 நிலவு மறைப்பு என்பது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 27ஆம் 28ஆம் திகதிகளில் நடைபெற்ற நிலவு மறைப்பு ஆகும். இது வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் செப்டம்பர் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை வானில் தென்பட்டது. ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும்மத்திய கிழக்கு நாடுகளில் செப்டம்பர் 28 ஆம் நாள் அதிகாலை தென்பட்டது. 2014-2015 காலத்தின் நிலவு மறைப்பு நாற்தொடர்களில் இந்த நிலவு மறைப்பே இறுதியானது ஆகும்.

புவியிலிருந்து நெருக்கமான அணுக்கத்திற்கு மிக அருகில் இருந்தமையால், இக்கிரகணத்தின் மத்தியில் நிலவானது இயல்பான அளவைவிடப் பெரியதாகக் காணப்பட்டது. இது பெருமுழுநிலவு என அழைக்கப்படுகிறது. வடகிழக்கு பிரேசிலின் கரைக்குச் சற்றே அப்பால், தலைக்கு நேர்மேலாகக் காணப்பட்ட நிலவின் கோண விட்டம் 34' ஐவிடப் பெரியதாக இருந்தது.[1][2]

2015ஆம் ஆண்டு நிகழ்ந்த இரு நிலவு மறைப்புகளின் ஒப்பீடு

புலப்படுதன்மை[தொகு]

இந்த நிலவு மறைப்பு வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும்மத்திய கிழக்கு நாடுகளில் புலப்பட்டது.


சந்திர கிரகணம் தென்படும் இடங்கள்

பூமியின் உருவகப்படுத்தப்பட்ட தோற்றம் மற்றும் சூரிய ஒளியினால் ஆன வளிமண்டல வளையம்
  1. Sky and Telescope
  2. Here’s the Scoop on Sunday’s Supermoon Eclipse, Bob King