உள்ளடக்கத்துக்குச் செல்

செபெக்-கு கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபெக்-கு கல்வெட்டு
செபெக்-கு கல்வெட்டு
Sebek-khu Stele.png
செய்பொருள்சுண்ணக்கல்
எழுத்துபண்டைய எகிப்திய மொழி
உருவாக்கம்சுமார் கிமு 1880–1840
தற்போதைய இடம்மான்செஸ்டர் அருங்காட்சியகம்
அடையாளம்3306

செபெக்-கு கல்வெட்டு (Sebek-khu Stele), இது செபெக்-கு (கு-சோபெக்) என்ற மனிதரின் நினைவாக எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்சத்தின் ஐந்தாம் மன்னர் மூன்றாம் செனுஸ்ரெத் (ஆட்சிக் காலம் கிமு 1878 முதல் கிமு 1839) அபிதோஸ் நகரத்தில் நிறுவிய ஒரு கல்வெட்டு ஆகும்.

இக்கல்வெட்டை, ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் ஜான் கார்ஸ்டாங்கால் 1901ம் ஆண்டில் எகிப்தின் பண்டைய அபிதோஸ் நகரத்தில் உள்ள கூ-சோபெக்கின் கல்லறைக்கு வெளியே கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்டது.[1]தற்போது இக்கல்வெட்டு ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2][3]

கல் வெட்டின் உள்ளடக்கம்

[தொகு]

இக்கல்வெட்டின் உரை பெரும்பாலும் கூ-சோபெக்கின் வாழ்க்கையைப் பற்றி கூறுகிறது. இது கானான் பிரதேசத்தைப் பதிவு செய்வதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் கல்வெட்டின் உரையில் "அவரது மாட்சிமை ஆசிய மக்களைத் தூக்கியெறிய வடக்கு நோக்கிச் சென்றது. அவரது மாட்சிமை செக்மெம் என்ற வெளிநாட்டு நாட்டை அடைந்தது (...) பின்னர் துரதிர்ஷ்டவசமான ரெட்டெனுவுடன் (தற்கால சிரியாவின் கோர் மாநிலம்)[4] சேர்ந்து", அங்கு செகேம்[5][6]வீழ்ந்தது எனக்குறிப்பிடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Stela of Khu-Sobek (Manchester Museum)
  2. Manchester Museum: 3306 Stela, Object, Registered, Africa, Egypt, Upper Egypt, Abydos
  3. The Land of the Bible: A Historical Geography, Yohanan Aharoni
  4. Retjenu
  5. Shechem
  6. Pritchard, James B. (2016). Ancient Near Eastern Texts Relating to the Old Testament with Supplement (in ஆங்கிலம்). Princeton University Press. p. 230. ISBN 978-1-4008-8276-2.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபெக்-கு_கல்வெட்டு&oldid=4476516" இலிருந்து மீள்விக்கப்பட்டது