செபுவானோ விக்கிபீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செபுவானோ விக்கிபீடியா (Cebuano Wikipedia) என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் செபுவானோ மொழி பதிப்பாகும். செபுவானோ: மொழியில் இதை விக்கிபீடியா சா சினுக்போனான் என்ற பெயரால் அழைக்கிறார்கள். தெற்கு பிலிப்பீன்சில் இம்மொழி பேசப்படுகிறது, 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி இந்த விக்கிப்பீடியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.[1] அவற்றில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை தானியங்கி பயனர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.

தற்போது 5,463,648 கட்டுரைகள் செபுவானோ விக்கிப்பீடியாவில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தானியங்கிப் பயனர் எல்எசுயேபாட் (Lsjbot) என்ற மென்பொருள் நிரலால் உருவாக்கப்பட்டவையாகும். செபுவானோ விக்கிப்பீடியாவில் மொத்தமாக 167 தீவிர விக்கிப்பீடியா செயல்பாட்டு பயனர்கள் மட்டுமே உள்ளனர்.

செபுவானோ மொழி[தொகு]

சுமார் 20 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாகவும், பிலிப்பீன்சு நாட்டில் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் செபுவானோ மொழி உள்ளது. செபுவானோ மொழி விக்கிப்பீடியாவே இந்த மொழியில் உள்ள ஒரே கலைக்களஞ்சியமுமாகும்.[2]

விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் செபுவானோ விக்கிப்பீடியா ஒரு மிகப்பெரிய பிலிப்பீன்சு மொழி விக்கிபீடியாவாகும். பிலிப்பீன்சு நாட்டில் இயங்கும் வாரே விக்கிப்பீடியா மற்றும் தகலாகு விக்கிபீடியாக்களை விட அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளைக் கொண்டு செபுவானோ விக்கிப்பீடியா முன்னணியில் உள்ளது.

வளர்ச்சிப் பாதை[தொகு]

செபுவானோ மொழி விக்கிப்பீடியா 2005 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.[3] 2006 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இவ்விக்கிப்பீடியாவில் 1000 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன.[4] இதே ஆண்டு நவம்பர் மாதத்தில் இவ்வெண்ணிக்கை 1400 கட்டுரைகளாக உயர்ந்தது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில் தானியங்கி மென்பொருள் பயனர்கள் மூலமாக பிரான்சின் நகராட்சிகள் குறித்து சுமார் பத்தாயிரம் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன.[5]

2012 ஆம் ஆண்டின் இறுதியில், கட்டுரைகளின் எண்ணிக்கை சுமார் 30,000 என அதிகரித்தது. 2012 டிசம்பர் 2012 மாதத்தில் எல்எசுயே தானியங்கி கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, கட்டுரைகளின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டில் வியத்தகு அளவில் அதிகரித்தன.

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே கட்டுரைகளின் எண்ணிக்கை ஒன்பது மடங்கு அளவுக்கு அதிகரித்தது.[6][7] 2015 ஆம் ஆண்டின் இறுதியில் 1.4 மில்லியன் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 99 சதவிகிதக் கட்டுரைகள் தானியங்கிகளால் உருவாக்கப்பட்டவையாகும். இவற்றில் சுமார் 25,000 கட்டுரைகள் உள்ளுர் அமைவிடங்கள் பற்றியும் மீதமுள்ள பிற கட்டுரைகள் உயிரினங்களைப் பற்றிய கட்டுரைகளாகவும் இருந்தன.

2014 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் செபுவானோ மொழி விக்கிபீடியா உலகின் பன்னிரண்டாவது பெரிய விக்கிபீடியாவாக உருவாகியது. 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எசுப்பானியம், இத்தாலியன், உருசியம், பிரஞ்சு, டச்சு மற்றும் செருமன் மொழி விக்கிப்பீடியாக்களை முந்திக்கொண்டு செபுவானோ மொழியில் இரண்டு மில்லியன் கட்டுரைகள் ஒன்றரை வருடங்களுக்குள் உருவாக்கப்பட்டன.

அடுத்த சுமார் அரை ஆண்டுகளில் , மூன்றாவது மில்லியனையும் மற்றொரு அரை ஆண்டுகள் கழித்து, நான்காவது மில்லியனையும் 2017 ஆகத்து மாதத்தில் ஐந்தாவது மில்லியன் கட்டுரையையும் செபுவானோ விக்கிப்பீடியா கடந்து வளர்ச்சியடைந்துள்ளது.

செபுவானோ மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் உள்ளடக்கம் (சூலை 2015, 1,211,364 கட்டுரைகள்):
95.8% (1,160,787) வாழும் உயிரினங்கள்/வகைப்பாடு;
3.3% (39,420) நகரங்கள் மற்றும் மக்கள்.
மைல்கற்கள்:
நாள் கட்டுரைகள் எண்ணிக்கை
9 சூலை 2005 19 articles[8]
30 ஆகத்து 2005 232 arcticles[9]
1 சனவரி 2006 1,000 கட்டுரைகள்[4]
1 நவம்பர் 2006 1,400 கட்டுரைகள்[10]
1 சனவரி 2007 13,521 கட்டுரைகள்[11]
7 பிப்ரவரி 2007 26,511 கட்டுரைகள்[12]
2 பிப்ரவரி 2013 100,000 கட்டுரைகள்
9 பிப்ரவரி 2013 150,000 கட்டுரைகள்
17 மார்ச்சு 2013 300,000 கட்டுரைகள்
26 சூன் 2013 400,000 கட்டுரைகள்
18 சூலை 2013 500,000 கட்டுரைகள்
7 ஆகத்து 2013 600,000 கட்டுரைகள்
16 சூலை 2014 1,000,000 கட்டுரைகள்
6 டிசம்பர் 2015 1,500,000 கட்டுரைகள்[1][13]
14 பிப்ரவரி 2016 2,000,000 கட்டுரைகள்
25 செப்டம்பர் 2016 3,000,000 கட்டுரைகள்
11 பிப்ரவரி 2017 4,000,000 கட்டுரைகள்
8 ஆகத்து 2017 5,000,000 கட்டுரைகள்

2015 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் செபுவானோ விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டிருந்த 1.21 மில்லியன் கட்டுரைகளில் 95.8% கட்டுரைகள் உயிரினங்கள் தொடர்பானவையாகும் (1,160,787) எஞ்சிய 3.3% கட்டுரைகள் நகரங்கள் மற்றும் மக்கள் தொடர்பானவையாகவும் (39,420) அமைந்திருந்தன.[14]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் செபுவானோ விக்கிபீடியாப் பதிப்பு