செபிசஸ் (ஏதெனியன் சமவெளி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏதென்ஸ்-லாமியா நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மேலே இருந்து செபிசஸ் ஆற்றின் காட்சி

செபிசஸ் (Cephissus (Athenian plain) என்பது கிரேக்கத்தின் ஏதென்சு நகருக்கு அருகில் உள்ள ஒரு ஆறாகும். இதற்கு அண்டையில் பாயும் ஆறான இலிசோசு ஆறுடன் சேர்ந்து, இது 420 சதுர கிமீ நீர்ப்பிடிப்புப் பகுதியை கொண்டுள்ளது. [1]

இந்த ஆற்றின் மூலம் பர்னிதா மற்றும் பென்டேலி மலைகளுக்கு இடையே உள்ள மலையிடைவழி பகுதியில் உள்ளது. இது அங்கிருந்து நியோ பாலிரோவிற்கும் மொஸ்காடோவிற்கும் இடையில் உள்ள பலேரம் விரிகுடாவை அடையும் வரை பொதுவாக தென்மேற்கே பாய்கிறது. வழியில் இந்த ஆறு ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகியை இணைக்கும் மோட்டர்வே 1 நெடுஞ்சாலைக்கு அருகில் பாய்கிறது. மோட்டர்வே 1 இன் இந்த பகுதிக்கு அவென்யூ கிஃபிசோ என்று பெயரிடப்பட்டுள்ளது, அதன் அருகே கிஃபிசோஸ் பேருந்து முனையம் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Preliminary Flood Risk Assessment" (கிரேக்கம்). Ministry of Environment, Energy and Climate Change. p. 58. 15 February 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.