செபாஸ்டியன் இஸ்டான்
செபாஸ்டியன் இஸ்டான் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 13, 1982 கான்ஸ்டானியா, உருமேனியா |
குடியுரிமை | உருமேனியா, அமெரிக்கா |
கல்வி | ரட்கர்சு பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–இன்று வரை |
செபாஸ்டியன் இஸ்டான் (ஆங்கில மொழி: Sebastian Stan)[1] (பிறப்பு: ஆகத்து 13, 1982) என்பவர் உருமேனியா-அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.
இவர் 2011 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்[2] திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), ஆன்ட்-மேன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), பிளாக் பான்தர் (2018), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018),[3] அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[4] போன்ற திரைப்படங்களில் பக்கி பார்ன்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார்.[5] 2015 ஆம் ஆண்டில் ஜொனாதன் டெம் இயக்கிய நகைச்சுவை-நாடகமான 'ரிக்கி மற்றும் 3 பிளாஷ்' மற்றும் ரிட்லி சுகாட் இயக்கிய அறிவியல் புனைகதைத் திரைப்படமான த மார்சன் போன்ற திரைப்படங்க்ளில் நடித்துளளார்.[6]
2021 ஆம் ஆண்டில் டிஸ்னி+ என்ற ஓடிடி தளத்திற்க்காக பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் என்ற வலைத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[7][8] இந்த தொடரை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, 'மால்கம் ஸ்பெல்மேன்' தலைமையில், 'கரி ஸ்கோக்லேண்ட்' என்பவர் இயக்கியுள்ளார். இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் தொடர் ஆகும்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இஸ்டான் 13 ஆகத்து 1982 ஆம் ஆண்டில் உருமேனியாவில் கான்ஸ்டானியாவில் பிறந்தார். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது இஸ்டானும் அவரது தாயார் ஜார்ஜெட்டா ஆர்லோவ்ஸியும் ஆஸ்திரியாவில் வியன்னா நகருக்கு குடிபெயர்ந்தனர்.[9] அங்கு அவர் பியானோ கலைஞராகப் பணியாற்றினார். அந்த காலம் ரோமானிய புரட்சி காலம் ஆகும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் நியூயார்க்கில் உள்ள ராக்லேண்ட் கவுண்டியில் குடியேறினர்.[10] அங்கு அவரது தாயார் அமெரிக்கா பள்ளியில் பணிபுரியும் ஒரு தலைமை ஆசிரியரை மணந்தார். அவர் உருமேனிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தால் வளர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gans, Andrew (December 28, 2006). "Pedi, Stan and Rosenblat Join Broadway's Talk Radio Cast". Playbill. Archived from the original on December 6, 2018. பார்க்கப்பட்ட நாள் September 28, 2014.
- ↑ Ng, Philiana (February 22, 2013). "ABC Eyeing Potential 'Once Upon a Time' Spinoff, Recasting Mad Hatter". The Hollywood Reporter. Archived from the original on September 20, 2017. பார்க்கப்பட்ட நாள் September 19, 2017.
- ↑ Strom, Marc (அக்டோபர் 28, 2014). "Marvel Pits Captain America & Iron Man in a Cinematic Civil War". Marvel.com. Archived from the original on அக்டோபர் 28, 2014. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 28, 2014.
- ↑ Debruge, Peter (September 8, 2019). "Toronto Film Review: 'Endings, Beginnings'". Variety. Archived from the original on September 10, 2019. பார்க்கப்பட்ட நாள் September 13, 2019.
- ↑ Kit, Borys (August 31, 2016). "'Captain America's' Sebastian Stan Joins Steven Soderbergh's 'Logan Lucky' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on May 17, 2017. பார்க்கப்பட்ட நாள் April 17, 2020.
- ↑ Fleming, Jr., Mike (அக்டோபர் 24, 2014). "Sebastian Stan Joins 'The Martian' And 'Ricki And The Flash'". Deadline Hollywood. Archived from the original on அக்டோபர் 30, 2014. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 30, 2014.
- ↑ Couch, Aaron (April 11, 2019). "Marvel's Kevin Feige Promises "Major Storylines" for Disney+ Shows". The Hollywood Reporter. Archived from the original on April 12, 2019. பார்க்கப்பட்ட நாள் April 12, 2019.
- ↑ Fleming Jr., Mike (May 20, 2019). "Kari Skogland To Direct 6-Part 'The Falcon And The Winter Soldier' Miniseries With Anthony Mackie, Sebastian Stan, Daniel Bruhl & Emily Van Camp". Deadline Hollywood. Archived from the original on May 21, 2019. பார்க்கப்பட்ட நாள் May 21, 2019.
- ↑ "Sebastian Stan talking for Romanian television ProTV (with English subtitle)". Pro TV. December 1, 2016 – via YouTube.
- ↑ Riegel, Katie (March 29, 2007). "Sebastian Stan". Broadway.com. John Gore Organization. பார்க்கப்பட்ட நாள் September 25, 2020.
- ↑ "Will Sebastian Stan Become Captain America?". Jimmy Kimmel. November 9, 2018. Archived from the original on May 21, 2019. பார்க்கப்பட்ட நாள் March 11, 2019 – via YouTube.