உள்ளடக்கத்துக்குச் செல்

செபாசுட்டியன் போக்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபாசுட்டியன் போக்னர்
Sebastian Bogner
2016 ஆம் ஆண்டில் செபாசுடியன் போக்னர்
நாடுசெருமனி (2013 வரை)
சுவிட்சர்லாந்து (2013 முதல்)
பிறப்பு17 January 1991 (1991-01-17) (வயது 34)
போர்செய்ம், செருமனி
பட்டம்பேராதன் (2009)
பிடே தரவுகோள்2577 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2619 (ஆகத்து 2018)

செபாசுட்டியன் போக்னர் (Sebastian Bogner) என்பவர் செருமானிய, சுவிட்சர்லாந்திய நாடுகளைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1991 ஆம் ஆண்டில் சனவரி மாதம் 17 ஆம் தேதியன்று இவர் செருமன் நாட்டின் போர்செய்ம் நகரத்தில் பிறந்தார். 2009 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு இவருக்கு சதுரங்க கிராண்டுமாசுட்டர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டு வரை செருமன் நாட்டிலும் பின்னர் சுவிட்சர்லாந்திலும் வாழ்ந்து வருகிறார்.

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

2005 ஆம் ஆண்டில் தனது பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டத்தையும் 2009 ஆம் ஆண்டில் தனது கிராண்ட்மாசுட்டர் பட்டத்தையும் பெற்றார். 39 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் செருமன் நாட்டின் பிரதிநிதியாகப் போட்டியிட்டார்.[1] 2013 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்திற்கு மாறினார். 42ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் சுவிட்சர்லாந்திற்காகப் போட்டியிட்டார்.[2] 2018 ஆம் ஆன்டு மார்ச்சு மாதத்தில் ஐரோப்பிய தனிநபர் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் விளையாடினார். இப்போட்டியில் அறுபத்தெட்டாவது இடத்தைப் பிடித்தார்.[3] 6½/11 (+4–2=5) என்ற புள்ளிகளைப் பெற்றார்.[4] 2018 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் நடைபெற்ற சுவிசு சதுரங்க வெற்றியாளர் போட்டியை வென்றார்.[5] 2021ஆம் ஆண்டு சூலை மாத நிலவரப்படி, இவர் 2581 பிடே புள்ளிகள் பெற்ற 2ஆவது சுவிட்சர்லாந்து வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். வாடிம் மிலோ முதல் நபராக அறியப்படுகிறார்.[6]

2021 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் போக்னர் பிடே உலகக் கோப்பை போட்டியில் போட்டியிட்டார். இந்திய கிராண்ட்மாசுடர் பி. இனியனால் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 39th Chess Olympiad: Khanty-Mansiysk 2010
  2. 42nd Chess Olympiad: Baku 2016
  3. Staff writer(s) (28 March 2018). "European Individual Chess Championship 2018". Chess Results.
  4. Staff writer(s) (28 March 2018). "European Individual Chess Championship 2018: Bogner Sebastian". Chess Results.
  5. Bogner wins Swiss Championship 2018
  6. "FIDE Country Top chess players". ratings.fide.com. Archived from the original on 2018-07-06. Retrieved 2021-07-21.
  7. "Tournament tree — FIDE World Cup 2021". worldcup-results.fide.com. Retrieved 2021-07-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபாசுட்டியன்_போக்னர்&oldid=4410836" இலிருந்து மீள்விக்கப்பட்டது