உள்ளடக்கத்துக்குச் செல்

செபாசுட்டியன் சேவியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபாசுட்டியன் சேவியர்
Sebastian Xavier
தனிநபர் தகவல்
பிறப்பு10 பெப்ரவரி 1970 (1970-02-10) (அகவை 56)
ஆலப்புழா, கேரளம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்
நீச்சல்பாணிகள்கட்டற்ற வகை நீச்சல்

செபாசுட்டியன் சேவியர் (Sebastian Xavier) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நீச்சல் வீரராவார். 1970 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

தொழில்

[தொகு]

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவின் அதிவேக நீச்சல் வீரராகத் திகழ்ந்தார். தனது தொழில் வாழ்க்கையில் பல தேசிய சாதனைகளுடன், 1998 முதல் 2009 ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் 50 மீட்டர் கட்டற்ற வகை ​​நீச்சலில் 22.89 வினாடிகளில் தேசிய சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.[1][2] 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றார்.[3] இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய வாகையாளர் போட்டி மற்றும் ஆசிய பசிபிக் சந்திப்புகளில் 36 தங்கப் பதக்கங்களையும், தேசியப் போட்டிகளில் 66 தங்கப் பதக்கங்களையும் வென்றார். 2001 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதைப் பெற்றார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

முன்னாள் இந்திய தடகள வீராங்கனை மோலி சாக்கோவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினர் தெற்கு இரயில்வேயில் பணிபுரிகின்றனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Xavier sets 50m national mark". The Tribune. PTI (Chandigarh, India). 1998-09-09. http://www.tribuneindia.com/1998/98sep09/sports.htm#3. பார்த்த நாள்: 2014-09-12. 
  2. Lal AG, Atul (2009-10-09). "Khade topples Sebastian's 11-year-old record". The New Indian Express (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 12 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140912131251/http://www.newindianexpress.com/sport/article136972.ece. பார்த்த நாள்: 2014-09-12. 
  3. Sebastian Xavier Biography and Statistics - Olympics at Sports-Reference.com
  4. "Arjuna Awardees". Ministry of Youth Affairs and Sports. Archived from the original on 2007-12-25. Retrieved 2009-09-05.
  5. Suryanarayan, S. R. (12 October 2001). "Xavier's enduring saga of success". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104045253/http://www.hindu.com/2001/10/12/stories/0712100a.htm. பார்த்த நாள்: 2009-04-12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபாசுட்டியன்_சேவியர்&oldid=4474828" இலிருந்து மீள்விக்கப்பட்டது