உள்ளடக்கத்துக்குச் செல்

செபங்கார் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபங்கார் தீவு
Sepanggar Island
Map
Interactive map of செபங்கார் தீவு
Sepanggar Island
புவியியல்
ஆள்கூறுகள்6°4′4″N 116°4′26″E / 6.06778°N 116.07389°E / 6.06778; 116.07389
மேலாண்மை
மாநிலம் இந்தியா

செபங்கார் தீவு (ஆங்கிலம்: Sepanggar Island) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் இருக்கும் செபங்கார் துணை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.

இந்தத் தீவின் கிழக்குக் கரையில் ஒரு சிறிய சமூகத்தினர் வாழ்கின்றனர். நகர மையத்தில் இருந்தும் இலிகாசு விரிகுடாவிலிருந்தும் செபங்கார் தீவை எளிதாகக் காணலாம். தீவு வடகிழக்கு-தென்மேற்கு நோக்குநிலையைக் கொண்டுள்ளதால் கிழக்குக் கரையோரத்தில் கயா விரிகுடாவின் காட்சியைக் காணலாம். அடர்த்தியான வெப்பமண்டல மழைக் காடுகளால் மூடப்பட்டுள்ள இரண்டு முக்கிய சிகரங்கள் செபங்கார் தீவில் உள்ளன.

நகர மையத்திற்கு அருகிலுள்ள இயெட்டி வழியாகவும் அல்லது கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள செபங்கார் விரிகுடாவில் இருந்தும் தீவை அணுகலாம். இருப்பினும், இந்தத் தீவு உண்மையில் சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்படுவதில்லை.

பெரும்பாலும் மீனவர்கள் இங்கு தங்கி இருக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின் பல குண்டுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Sepangar Island". WikiMapia. Retrieved 21 March 2012.
  2. ↑ "Sepangar Island". World Flicks. Archived from the original on 10 மே 2012. Retrieved 21 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபங்கார்_தீவு&oldid=4626696" இலிருந்து மீள்விக்கப்பட்டது