சென்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்ழ்சென் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்சென்
Shenzhen

深圳
துணை மாகாணம்
深圳市
Shenzhen city montage.png
குவாங்டனில் சென்சென் நகர ஆட்பகுதியின் அமைவிடம்
குவாங்டனில் சென்சென் நகர ஆட்பகுதியின் அமைவிடம்
சென்சென்Shenzhen is located in China
சென்சென்Shenzhen
சென்சென்
Shenzhen
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°33′N 114°06′E / 22.550°N 114.100°E / 22.550; 114.100ஆள்கூற்று: 22°33′N 114°06′E / 22.550°N 114.100°E / 22.550; 114.100
நாடு சீனா
மாகாணம் குவாங்டங்
மாவட்டங்கள் 6
சி.பொ.ம நிறுவியது மே 1, 1980
அரசு
 • வகை துணை மாகாண நகரம்
பரப்பளவு
 • துணை மாகாணம் 2,050
 • Urban 412
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 25
மக்கள்தொகை (2009)[1]
 • துணை மாகாணம் 89,12,300
 • அடர்த்தி 4,348
 • நகர்ப்புறம் 33,07,700
 • நகர்ப்புற அடர்த்தி 8,029
மக்களினம் சென்செனர்
நேர வலயம் சீனச் சீர்தர நேரம் (ஒசநே+8)
தொலைபேசிக் குறியீடு 755
GDP 2009[1]
 - மொத்தம் CNY 820.123 பில்லியன்
USD 120.14 பில்லியன்
 - தனி நபர் CNY 92,771
USD 13,590
 - வளர்ச்சி Green Arrow Up Darker.svg 10.7%
ஊர்தி உரிம சட்டம் முன்னொட்டுகள் 粤B
இணையத்தளம் (ஆங்கிலம்) sz.gov.cn
சென்சென்
Shenzhen in Chinese.png
"சென்சென்", சீன மொழியில்
சீனம் 深圳
சொல் விளக்கம் ஆழமான வரப்புகள்

சென்சென் (Shenzhen) ஆங்காங்கிற்கு உடனடி வடக்கே சீனாவின் தென்பகுதியில் குவாங்டங் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும். சென்சென் சீனாவின் முதல் சிறப்பு பொருண்மிய வலயமாகவும் மிகுந்த வெற்றியடைந்த திட்டமாகவும் விளங்குகின்றது. உள்ளாட்சி நிர்வாகத்தில் தற்போது ஓர் மாகாணத்தை விட சற்றே அதிகாரம் குறைந்த துணை மாகாண நிலை பெற்று விளங்குகின்றது.

சென்சென்னின் புதுமையான மற்றும் நவீன நகர்த்தோற்றத்திற்கு துடிப்பான பொருளாதாரமும் விரைவான வெளிநாட்டு முதலீடுகளும் காரணமாயிற்று. இது 1970களில் சீனா தனது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தி சிறப்பு பொருண்மிய வலயங்களில் "சீர்திருத்த பொருளாதார, திறந்த நிர்வாக" அமைப்பை ஏற்படுத்தியதால் நிகழ்ந்தது. இவற்றிற்கு முன்னர் சென்ச்சென் ஓர் சிற்றூராக இருந்தது. எழுபதுகளின் பிந்தைய காலங்களில் சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். US$30 பில்லியனுக்கு மேலாக தயாரிப்பு தொழிலகங்களில் முழுமையும் வெளிநாட்டு உரிமை உடைய நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் இணைந்த வெளிநாட்டு முதலீடுகளும் ஈடுபட்டுள்ளன. தற்போது கூடுதலாக சேவைத்துறையிலும் முதலீடுகள் மிகுந்து வருகின்றன. உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக சென்சென் விளங்குகின்றது.[2] தெற்கு சீனாவின் முதன்மை நிதி மையமாக விளங்குவதால் சென்சென்னில் பங்குச் சந்தையும் பல நிறுவனங்களின் தலைமையகமும் உள்ளன. சென்சென் மூன்றாவது நெருக்கம் மிகுந்த கொள்கலன் துறைமுகமாகவும் விளங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "深圳市2009年国民经济和社会发展统计公报" (Simplified Chinese). Shenzhen Municipal Statistic Bureau (2010-04-26). பார்த்த நாள் 2010-05-03.
  2. "Shenzhen". U.S. Commercial Service (2007). பார்த்த நாள் 2008-02-28.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிப்பயணத்தில் சென்சென் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்சென்&oldid=2031142" இருந்து மீள்விக்கப்பட்டது