சென்னை வான்காணகம்
சென்னை வானியல் ஆய்வகம் (Madras Observatory) 1786 ஆம் ஆண்டு வில்லியம் பெட்ரி என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு தனியார் வானியல் ஆய்வகம் ஆகும். மெட்ராசு வானியல் ஆய்வகம் என்ற பெயரில் இது தொடங்கப்பட்டது. சென்னை பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் 1792 ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வகத்தை நிருவகிக்கத் தொடங்கியது. வரைபடத்திற்காக அட்சரேகைகளைப் பதிவுசெய்யவும், நேரத் தரங்களைப் பராமரித்து வழிகாட்டுதலும் இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்கான முக்கிய நோக்கம் ஆகும். பிற்காலத்தில் இந்த ஆய்வகம் நட்சத்திரங்கள் மற்றும் புவி காந்தவியல் பற்றிய அவதானிப்புகளையும் செய்தது. சுமார் 1792 முதல் 1931 வரை இயங்கியபோது நட்சத்திரங்களின் விரிவான பட்டியலை தயாரிப்பது ஆய்வகத்தின் பிரதானமான பணியாக இருந்தது.
வரலாறு
[தொகு]சென்னையிலுள்ள எழும்பூர் என்ற இடத்தில் ஒரு சிறிய தனியார் ஆய்வகத்தை வைத்திருந்த தொழில்முறை சாராத வானியலாளர் வில்லியம் பெட்ரியின் முயற்சியால் இந்த ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டது. பெட்ரியின் அசல் ஆய்வகம் 1786 ஆம் ஆண்டு இரும்பு மற்றும் மரங்கள் கொண்டு கட்டப்பட்டு நிறுவப்பட்டது. 1789 ஆம் ஆண்டில் பெட்ரி இங்கிலாந்துக்கு ஓய்வு பெற்றி இங்கிலாந்துக்கு திரும்புவதற்கு முன்பு மெட்ராசு அரசாங்கத்திற்கு தனது கருவிகளை பரிசளித்தார். இந்தியாவில் வானியல், புவியியல் மற்றும் கடற்பயணம் பற்றிய அறிவை மேம்படுத்தும் நோக்கத்திற்காக அதிகாரப்பூர்வ ஆய்வகத்தை நிறுவ வேண்டும் என்ற பெட்ரியின் வேண்டுகோளை சர் சார்லசு ஓக்லெ ஏற்றுக்கொண்டார்.[1]. நுங்கம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையில் மைக்கேல் டாப்பிங் என்பவர் ஆய்வகக் கட்டிடத்தை வடிவமைத்தார். இந்த கட்டிடம் 40 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட ஓர் அறையாக இருந்தது. அறையின் உயரம் 15 அடி உச்சவரம்பைக் கொண்டிருந்தது.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இந்தியாவில் ஒரே வானியல் ஆய்வுக்கூடம் மட்டுமே விண்மீன்களைப்.பற்றி ஆய்வுசெய்தது. நார்மன் ராபர்ட் போக்சன், மைக்கேல் டப்பிங் ஜான் கோல்டிங்காம் ஆகியோர் வானியல் ஆராய்ச்சியாளர்களாக இருந்தார்கள். 1899 ஆம் ஆண்டளவில், வானிலை தொடர்பான தரவுகளைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டது.
15 அடி உயரமான கிரானைட் தூண் 10 டன் எடையுள்ளதாக உள்ளது, இது முதலில் கட்டிய காட்சிக் கருவிகளை இன்றும் கட்டிக்காத்து வருகிறது. இங்கு கட்டிடக்க லைஞர், மைக்கேல் டப்பிங் . தூணில் பொறித்த தமிழ்,, தெலுங்கு கல்வெட்டுகள் உள்ளன.
1855 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அன்றைய மதராசு மாகாணத்தின் கிழக்கு இந்தியா ஆய்வகத்தின் வில்லியம் ஸ்டீபன் ஜேக்கப், இருமை விண்மீன் 70 ஓபியுச்சியில் வட்டணைப் பிறழ்வுகளைக் கண்டுபிபிடித்தார். இவர் சூரியக்குடும்பத்திற்கு அப்பால் உள்ள ஒரு கோளைக் கண்டுபிடித்ததாகக் கருதினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Allan, Rob J.; Reason, Chris J.C.; Carroll, Penny; Jones, Phil D. (2002). "A reconstruction of Madras (Chennai) mean sea-level pressure using instrumental records from the late 18th and early 19th centuries". International Journal of Climatology 22 (9): 1119–1142. doi:10.1002/joc.678. Bibcode: 2002IJCli..22.1119A.