சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் புதிய வரைவுத்திட்டம்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Development Authority) சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டமிடும் முகாமையாகும்.

வரலாறு[தொகு]

சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் 1972 -ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1974 - ஆம் ஆண்டு, "1971 தமிழ்நாடு நகர வளர்ச்சி மற்றும் திட்டமிடல்" மசோதாவின் படி இன்றியமையா நிறுவனம் என்ற தகுதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டது.

உறுப்பினர்கள்[தொகு]

எண் உறுப்பினர் மாண்பு பொறுப்பு உறுப்பினர் எண்ணிக்கை
1 அமைச்சர் - தகவல் துறை தலைவர் 1
2 துணை தலைவர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் துணை தலைவர் 2
3 உறுப்பினர் - செயலர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உறுப்பினர் 1
3 அரசு செயலர், வீட்டு வசதித்துறை உறுப்பினர் 1
4 அரசு செயலர், நிதித்துறை உறுப்பினர் 1
5 அரசு செயலர், தொழில் துறை உறுப்பினர் 1
6 அரசு செயலர், போக்குவரத்து துறை உறுப்பினர் 1
7 ஆணையர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் 1
8 மேலாண் இயக்குனர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உறுப்பினர் 1
9 இயக்குனர், நகர வளர்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவு உறுப்பினர் 1
10 தலைமை நகர திட்டவினைஞர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உறுப்பினர் 1
11 தலைமை பொறியாளர், நெடுஞ்சாலை மற்றும் ஊரகப்பனித்துறை உறுப்பினர் 1
12 அரசு தலைமை கட்டிடக்கலைஞர் உறுப்பினர் 1
13 இணை இயக்குனர், நகர வளர்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவு உறுப்பினர் 1
14 தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உறுப்பினர் 1
15 தலைவர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உறுப்பினர் 1
16 சட்டமன்ற உறுப்பினர், தமிழக சட்டபேரவை உறுப்பினர் 2
17 சென்னை பெருநகர் பரப்பின் நகராட்சி மன்ற உறுப்பினர் உறுப்பினர் 4
18 உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சிறப்பு அழைப்பாளர் 1

குழுமத்தின் செயல்பாடுகள்[தொகு]

1) சென்னை பெருநகர் பரப்பின் பகுதிகளில் களப்பணியாற்றி, அதன் அடிப்படையில் அறிக்கைகள் அளித்தல்.
2) சென்னை பெருநகர் பரப்பிற்கு வரைவு திட்டம் ஆயத்தம் செய்தல்; விரிவான கட்டமைப்பு திட்டம் ஆயத்தம் செய்தல்; புதிய நகர்களை உருவாக்கும் திட்டங்களை ஆயத்தம் செய்தல்.
3) செயல்பாட்டில் இருக்கும் அண்மைய நிலப்பயன்பாட்டு வரைபடத்தை தயாரித்தல்; புதிய திட்டங்களுக்காக தேவைப்படுகின்ற வரைபடங்களை ஆயத்தம் செய்தல்.
4) புதிய திட்டப்பணிகளை விரைந்து முடித்தல்
5) சென்னை பெருநகர பரப்பின் பகுதிகளில் ஒரு பிரிவு அல்லது முழுமையான பரப்பளவை புதிய நகர் என்று தீர்மானித்து கீழ்கண்ட செயல்பாடுகளை செய்தல்.
- குறிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நகர் படைப்பதர்க்கான வரைவை தயாரித்தல்
- குறிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நகர் உருவாவது புதிய நகர திட்டமிடலின் படி அமைக்கப்படுவதை வரையறை செய்தல்.

குழுமத்தால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்[தொகு]

(1) சென்னை புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு
(2) கோயம்பேடு வணிக வளாகம்
(3) வெளி வட்ட சாலை

வெளி இணைப்புகள்[தொகு]