சென்னை புத்தகக் காட்சி 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
37-வது சென்னை புத்தகக் காட்சியின் உட்புற நுழைவாயில்களில் ஒன்று

சென்னை புத்தகக் காட்சி 2014 அல்லது 37-வது சென்னை புத்தகக் காட்சி என்பது சனவரி 10ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை சென்னையின் நந்தனம் பகுதியில் அமைந்துள்ள ஒய். எம். சி. ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சி. ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் புத்தகக் காட்சி நடத்துகிறது. அந்த வகையில் இந்த புத்தக காட்சி 37ஆவது ஆகும்.

சிறப்பம்சங்கள்[தொகு]

2 இலட்சம் சதுரஅடிப் பரப்பில் அமைந்துள்ள 777 கடைகளில் 5 இலட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டு புத்தகக்காட்சிக்கென்றே 3 ஆயிரம் தலைப்புகளில் புதிய புத்தகங்களை பதிப்பகங்கள் கொண்டு வந்தன. மாலை நேரங்களில் வழக்கம்போல இலக்கிய நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் நடந்தன. 2014ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறும் 13 நாட்களில் 8 நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தன. முந்தைய ஆண்டு 10 கோடி ரூபாய்க்கான விற்பனை என்பது 2014ஆம் ஆண்டு முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. செ. கவாஸ்கர் (13 சனவரி 2014). "வாசகர்களை வாரி அணைக்க புத்தகங்கள்...". தீக்கதிர்: pp. 8. 

வெளியிணைப்புகள்[தொகு]