சென்னை பாடல்
| "சென்னை பாடல் The Madras Song" | |
|---|---|
| பாட்டு | |
| பதிவு | 2014 |
| நீளம் | 4:18 |
| இசையமைப்பு | விஜய் பிரபாகரன் |
| பாடலாசிரியர் | சுப்பு |
| தயாரிப்பாளர் | முருகப்பா குழுமம் |
" சென்னை பாடல் " (The Madras Song) என்பது இந்திய பாடகி சக்திஸ்ரீ கோபாலனின் ஒரு பாடலாகும். இது சென்னை நகரத்தை பெருமைபடுத்தும் விதமாக முருகப்பா குழுமத்தால் தயாரிக்கப்பட்டது. சென்னை நிறுவப்பட்ட 375 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2014 ஆகத்தில் "தி மெட்ராஸ் சாங்" தொடங்கப்பட்டது. [1] [2] [3] [4] [5] [6]
இந்தப் பாடலின் தொடர்ச்சி, தி இந்து குழுமத்திற்காக ஓபஸ் ஜி7 ஆல் "மெட்ராஸ் பீட்ஸ்" என்று 2016 ஆம் ஆண்டு சென்னை நாளின் 377வது ஆண்டு விழாவின் மாலையில் தொடங்கப்பட்டது. [7]
கதைக்களம்
[தொகு]இந்தப் பாடலின் அதிகாரப்பூர்வ காணொளி, வானூர்தியில் சொந்த ஊர் திரும்ப இயலாமல், சென்னையில் சிக்கித் தவிக்கும் ருச்சி குமாரைப் பின்தொடர்கிறது. மூன்று நாட்கள் சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகையில், நகரத்தை ஆராய அதற்கான வழிகாட்டுதலுக்காக அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்.
இந்தக் காணொளியில் நடிகர்/மாடல் யாஸ்மின் பொன்னப்பா [8] ருச்சி குமாராக நடித்துள்ளார். இந்தக் காணொளியில் விசுவநாதன் ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா ரகுநாதன், நரேஷ் ஐயர், ஆலாப் இராசு, ஹரிசரண், பிரியதர்சினி கோவிந்த், ஆர். ஜே. பாலாஜி, "கிரேசி" மோகன், "மாது" பாலாஜி ஆகியோர் தோன்றியுள்ளனர்.
குழு
[தொகு]- எழுத்தாளர் / இயக்குநர்: விஜய் பிரபாகரன்
- இசை இயக்குனர்: விஷால் சந்திரசேகர்
- பாடலாசிரியர்: சுபு
- பாடகர்: சக்திஸ்ரீ கோபாலன்
- ஒளிப்பதிவாளர்கள்: ஜிவிஎஸ் ராஜு, இம்ரான் அகமது கேஆர்
- முன்னணி நடிகை: யாஸ்மின் பொன்னப்பா
- நிருவாக தயாரிப்பாளர்: கிருஷ்ணா ராம்குமார்
- இணை இயக்குனர்: சுவாதி ரகுராமன்
- உதவி இயக்குநர்கள்: மீரா. கார்த்திக், கீர்த்தி ராஜு
- தயாரிப்பு உதவியாளர்: ஆர்.எம். ரமேஷ் குமார்
- ஒளிப்படமி உதவியாளர்: பாஸ்கர்
- ஸ்டைலிஸ்ட்: யாஸ்மின் பொன்னப்பா
- தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள்: ரெட் ஸ்டுடியோ
- படத்தொகுப்பு: விஜய் பிரபாகரன்
- வண்ணக்கலைஞர்: மதன்
- சின்னம் வடிவமைப்பு: ஹகுஹோடோ பெர்செப்ட், சென்னை
- முருகப்பா குழுமத்தால் தயாரிக்கப்பட்டது
- வானொலி கூட்டாளி: 92.7 பிக் வானொலி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Celebrating Chennai at 375 with The Madras Song". 2014-08-18.
- ↑ "Around the City in Four Minutes". 2014-08-18. Archived from the original on 5 September 2014.
- ↑ "Celebrating a city". 2014-08-23.
- ↑ "Resonating with the spirit of the metropolis". 2014-08-19.
- ↑ "Madras by day, by night and by song". 2014-08-20.
- ↑ "Word play in namma Madras". 2014-08-22.
- ↑ "Beat Of the City". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-beat-of-the-city/article9015670.ece. பார்த்த நாள்: 23 August 2016.
- ↑ "'Shooting The Madras Song was a fantastic experience'". தி இந்து. 2014-08-21.