சென்னை தொழில் வர்த்தக சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னை தொழில் வர்த்தக சபை (Madras Chamber of Commerce and Industry) என்பது முன்னணி தொழில் முனைவோரால் நிர்வகிக்கப்பட்டு, தொழில்துறையினரின் தலைமையில் செயல்படும் ஒரு அரசு சார்பற்ற அமைப்பாகும். இதன் முதன்மை நோக்கம் என்பது பொருளாதாரம், வணிகம், பெருவணிகம், தொழிற்சாலை போன்றவற்றின் மீதான அரசாங்கக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துதல் ஆகும். மேலும் இது கல்வி மேம்பாடு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்றின் மேம்பாட்டுக்குக்கான பணிகளிலும் ஈடுபடுகிறது.

வரலாறு[தொகு]

1836 செப்டம்பர் 29 அன்று, சென்னை தொழில் வர்த்தக சபையை எட்டு தொழிலதிபர்கள் இணைந்து நிறுவினர். இதன் முதல் தலைவராக இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஜே. ஏ. அர்புத்னாட் ( J. A. Arbuthnot) இருந்தார்.[1] துவக்கத்தில் இதன் அலுவலகமானது பின்னி அண்ட் கோவிலில் தற்காலிகமாக இயங்கிவந்தது. பின்னர் 1869 ஆம் ஆண்டில் தி மெட்ராஸ் மெயில் அலுவலகத்தின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்து முதன்முதலில் ஒரு நிரந்தர இடத்தில் அலுவலகம் செயல்படத் துவங்கியது. 1924 ஆம் ஆண்டு, மெர்கண்டைல் வங்கி அலுவலகங்களுக்கு வர்த்தக சபையின் அலுவலகம் இடமாறியது.

தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் தொழிற்சாலைகள் போன்ற அமைப்புகளில், துவக்கத்தில் இருந்தே, பெரும்பாலான இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் சேரவில்லை. இந்திய வணிகர்கள், சென்னை தொழில் வர்த்தக சபை போன்ற தங்களுக்கான சொந்த அமைப்புகளைத் தொடங்கினர். 1964 ஆம் ஆண்டில் முதன்முதலில் இதன் தலைவர் பதவி இந்தியருக்கு கிடைத்தது.[2]

1900களின் முற்பகுதியில், இந்திய ரயில்வேயின் வளர்ச்சியில் இந்த அமைப்பு ஒரு முக்கிய பங்கு வகித்தது.

குறிப்புகள்[தொகு]

  1. Srinivasachari, C. S. (1939). "Madras in the Present Century-Part I". History of the city of Madras written for the Tercentenary Celebration Committee. Madras: P. Varadachary & Co.. பக். 312–313. 
  2. S. Muthiah (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. பக். 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88661-24-4. 

வெளி இணைப்புகள்[தொகு]