சென்னை தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்த புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவதற்காக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர் இந்நாளிலேயே ஒரு சிறு காணியை வாங்கினர்

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்[1].[2] இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.


==தோற்றம்== சென்னப்ப நாயக்கர் மகன் அய்யப்ப நாயக்கரின் பெயரில் இருந்தே "அய்யப்பன் தாங்கல்" என்னும் ஊர் வழங்கப்படுகிறது.. தற்போதும் இவரின் வாரிசுகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை கேட்டால் கூட சொல்வார்கள் சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழ் வன்னிய நாயக்கர் என்பதை.

விஜய நகர தெலுங்கு நாயக்கர் பிரதிநிதியாக இருந்த ஒரே காரணத்துக்காக சென்னப்ப நாயக்கரை "தெலுங்கர்" என்று விவரம் அறியாத சிலர் கூறி வருகின்றனர். மேலும் சென்னப்ப நாயக்கர் பெயரை சென்னப்ப நாயக்குடு என்று வேறு எழுதி வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்க தக்கது. சென்னையில் "நாயக்கர்" என்பது தமிழ் நாயக்கரான வன்னிய குல க்ஷத்ரியர்களையும். நாயுடு என்பது தெலுங்கு நாயக்கர்களையும் குறிக்கும். தெலுங்கு நாயக்கர்கள் தமிழ் பேசும் பகுதிக்குள் வருவதற்க்கு முன்பில் இருந்தே வன்னியர்கள் "நாயக்கர்" என்று அழைக்கப்பட்டதாலே. நிறையத் தமிழ் சாதி மக்கள் விஜய நகர மன்னர்களின் பிரதிநிதியாக இருந்த போதிலும் வன்னியர் மட்டுமே தமிழ் சாதிகளில் "நாயக்கர்" பட்டத்தினை தொன்று தொட்டு பயன்படுத்தி வருகின்றனர்

2014[தொகு]

பல மாறுதல்களைக் கண்ட சென்னை, 22 ஆகஸ்டு 2014ல் தனது 375வது வயதைக் கொண்டாடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.themadrasday.in
  2. தினமலர் நாளிதழின் சென்னை தினச் சிறப்புப் பக்கம்
  1. நம்ம Chennai டே பார்க்க https://www.youtube.com/watch?v=5r3ZFOxT1Mc

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_தினம்&oldid=2791314" இருந்து மீள்விக்கப்பட்டது