சென்னை சிவப்பு ஆடு
Jump to navigation
Jump to search
சென்னை சிவப்பு ஆடு (Madras Red sheep) என்பது வட தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்[தொகு]
இவற்றின் நிறம் சிவப்பு, இளம்சிவப்பு முதல் கரும்சிவப்பு வரை கொண்டது, இதன் நிறத்தைக் கொண்டே சென்னை சிவப்பு என இவை பெயர்பெற்றன. இந்த இன கிடா ஆடுகளுக்கு நல்ல சுருட்டையான கொம்புகள் இருக்கும், பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது. சில ஆடுகளுக்கு முன்நெற்றி, அடிவயிறு, கால்களுக்கிடையில் வெள்ளைநிறம் காணப்படும். வளர்ந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 24 கி.கிஎடையுடனும் இருக்கும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "செம்மறியாட்டினங்கள்". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.
- ↑ "செம்மறியாட்டு இனங்கள்". அறிமுகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் இணையதளம். பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.