சென்னை சர்வதேசத் திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா
வார்ப்புரு:Caption
இடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
நிறுவப்பட்டது 2002
மொழி சர்வதேசம்
இணையத் தளம்

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா (Chennai International Film Festival, CIFF)) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரில் நடத்தப்படும் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகும். இவ்விழாவை இந்தியத் திரைப்படச் சங்கம், ஐ.சி.ஏ.எஃப் (ICAF) ஆகியவை தமிழக அரசுடன் இணைந்து நடத்துகின்றன.[1] 2002 ஆம் ஆண்டு முதல் இத்திரைப்பட விழா நடந்து வருகிறது.தமிழக அரசு, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்தியத் திரைப்பட அமைப்பும் இவ்விழாவிற்கு உறுதுணையாய் உள்ளன.

நோக்கம்[தொகு]

உலக அளவில் சிறந்த திரைப்படங்கள் இவ்விழாவின் போது திரையிடப்படும். உலக மக்களுக்கிடையே நட்புறவை உருவாக்கவும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை திரைப்படங்களின் மூலம் அறிந்து கொள்வதே இத்திரைப்பட விழாவின் நோக்கமாகும்.[1] இது வரை 100 க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.[2]

விருதுகள்[தொகு]

இவ்விழாவின் போது கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.

  • சிறந்த தமிழ்த் திரைப்படம்
  • இரண்டாவது சிறந்த திரைப்படம்
  • நடுவர்களின் சிறப்பு விருது
  • இளைஞர்களுக்கான அமிதாப் பச்சன் விருது. (2013 முதல்)

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 அதிகாரபூர்வ இணையதளம் http://www.chennaifilmfest.com/ciff.html
  2. Official website filmlist 2010 http://www.chennaifilmfest.com/films.html