சென்னை சமூகப் பணி பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை சமூகப் பணி பள்ளி
வகைசுயாட்சி
உருவாக்கம்1952
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.mssw.in

சென்னை சமூகப் பணி பள்ளி (Madras School Of Social Work) ( சுருக்கமாக: எம்.எஸ்.எஸ்.டபிள்யூ ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி கல்லூரி ஆகும். இது 1952 இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இங்கு மற்றும் சமூக அறிவியலில் பல்வேறு இளங்கலை, முதுகலை படிப்புகள் வழங்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

சென்னை சமூகப்பணி பள்ளி கல்லூரியானது சென்னையில் 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். என்ஏஏசி-ஆல் அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரியானது, சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. சென்னை சமூகப்பணி பள்ளியானது மேரி கிளப்வாலா ஜாதவ் என்பவரால் இந்திய சமூக பணி மாநாடு அமைப்பின் (இந்திய சமூக நல கவுன்சில் என பெயர் மாற்றப்பட்டது) சென்னைக் கிளை மற்றும் கில்ட் ஆஃப் சர்வீஸ் (மத்திய) ஆகியவற்றின் கூட்டுறவில் நிறுவப்பட்டது. சமூக கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (எஸ்.எஸ்.இ.ஆர்) சார்பில் இந்தக் கல்லூரி நடத்தப்படுகிறது.

கல்வி[தொகு]

முதுகலை சமூக பணி - எம்.எஸ்.டபிள்யூ (அரசு உதவி மற்றும் சுயநிதி)

முதுகலை அறிவியல் - உளவியல் ஆலோசகர் (சுய நிதி)

புதுகலை- மனித வள மேலாண்மை (சுய நிதி)

முதுகலை- மனித வளங்கள் மற்றும் நிறுவன மேம்பாடு (சுய நிதி)

முதுகலை மேம்பாட்டு மேலாண்மை (சுய நிதி)

முதுகலை சமூக தொழில்முனைவு (சுய நிதி)

இளங்கலை- சமூக பணி (சுய நிதி)

இளம் அறிவியல்- உளவியல் (சுயநிதி)

பட்டயப் படிப்பு- மனித வள மேலாண்மை (கெல்சாவின் கூட்டு சேர்ந்து)

பட்டையப் படிப்பு- பணியாளர் மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகளில் (ஹான்ஸ்)

ஆராய்ச்சிப் படிப்புகள்[தொகு]

ஆய்வியல் நிறைஞர்- சமூக பணி மற்றும் உளவியல் / முனைவர்- சமூகப் பணியில்

இக்கல்லூரியானது சமூக பணி மற்றும் உளவியலில் பாடத்தில் முழுநேர ஆய்வியல் நிறைஞர் பாடத்திட்டத்தை வழங்குகிறது. இதில் சேருவதற்கு, விரும்புபவர்கள் 12ஆம் வகுப்பு முடித்து, மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். இளங்கலைப் பாடத்தில் (1991 க்குப் பிறகு 55% மதிப்பெண்களும், 1991 க்கு முன் 50% மதிப்பெண்களும்) தேர்ச்சியுற்றிருக்க வேண்டும்.

இக்கல்லூரியில் முழுநேர மற்றும் பகுதிநேர முனவர் ஆராய்சி வழங்குகிறது. இதில் சேர விரும்புவபர்கள் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை நடைமுறை சென்னைப் பல்கலைக்கழக வழிகாட்டுதல்களின்படி நனத்தப்படுகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள்[தொகு]

நூலகம்

கல்லூரி நூலகத்தில் சுமார் 16,000 புத்தகங்கள் மற்றும் பல பத்திரிகைகள் உள்ளன. நூலகம் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு பார்-குறியீட்டு சேவைகளை கொண்டுள்ளது. நூலகம் நகலெடுக்கும் வசதியையும் வழங்குகிறது.

கணினி மையம்

கல்லூரியில் மல்டிமீடியா கணினிகள், இணையம், அச்சுப்பொறி வசதிகள் கொண்ட கணினி மையம் உள்ளது. ஒவ்வொரு பாடத் திட்டங்களுக்கும் விதிகளுக்கு உட்பட்டு, மாணவர்கள் மின்னஞ்சல், இணைய உலாவுதல், விளக்கக்காட்சிகளை உருவாக்குதல், தரவு பகுப்பாய்வு ஆகியவற்றிற்காக இந்த மையத்தைப் பயன்படுத்தலாம்.

ஒலி-காட்சி

பெரும்பாலான வகுப்பறைகளில் எல்சிடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.

வாகன நிறுத்தம்

மாணவர்களின் இரு சக்கர வாகனங்கள் வளாகத்திற்குள் நிறுத்த கட்டணங்கள் நிறுத்தக வசதிகள் உள்ளன. போதுமான இடவசதி இல்லாததால் எந்தவொரு காரணத்திற்காகவும் மாணவர்கள் அல்லது பார்வையாளர்களின் நான்கு சக்கர வாகனங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

விடுதி

வளாகத்திற்குள் நிபந்தனைகளுக்கு உட்பட்ட விடுதி வசதி உள்ளது. தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்த மாணவர்களுக்கு விடுதி சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.

முழுமையான விவரங்களுக்கு www.mssw.in ஐப் பார்வையிடவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_சமூகப்_பணி_பள்ளி&oldid=2794527" இலிருந்து மீள்விக்கப்பட்டது