சென்னை கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி ரிப்பன் பில்டிங் , சென்னை, நகரில் காணப்படும் இந்திய-சாராசெனிக் கட்டிடக்கலை பாணியின் ஒரு எடுத்துக்காட்டு.

சென்னை கட்டிடக்கலை பல கட்டிடக் கலைகளின் தொகுப்பாகும். பழங்காலத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட திராவிடக் கோயில்கள் முதல் காலனித்துவத்தின் கடைசியாக இந்தோ-சராசனிக் பாணியில் வானளாவிய கட்டிடங்களை கொண்டது. சென்னை துறைமுகத்தில் காலனித்துவத்தின் அடையாளமாக பழைய கோயில்கள் தேவாலயங்கள் மசூதிகள் துறைமுகத்தின் அருகில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டு வரையில், சென்னை நகரம், அதன் 426   சதுர   கி.மீ., எல்லைக்குள் சுமார் 6,25,000 கட்டிடங்கள் கொண்டிருந்தது, அதில் சுமார் 35,000 அடுக்குமாடிகள் (நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட மாடிகள்) ஆகும். இவற்றில், கிட்டத்தட்ட 19,000 வணிக நோக்கங்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளன.[1]

சுருக்கமான வரலாறு[தொகு]

ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது, புதிய, ரோமானிய கட்டிடக் கலைகள் கொண்டுவரப்பட்டன. இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் குடியேற்றமாக சென்னை அதன் பாணியில் கட்டப்பட்ட பல கட்டுமானங்களை கொண்டுள்ளது. ஆரம்ப காலங்களில் கிடங்குகள், சுவர் பதிவுகள் கொண்ட நகரம் கடற்கரை ஓரம் கட்டமைக்கப்பட்டது. முகலாயர்களுக்கு பிறகு ஐரோப்பிய குடியேற்றவாதிகள் ஆகிய போர்ச்சுக்கீசியர், பிரஞ்சு போன்றவர்களைவிட பிரிட்டிஷாரின் கட்டிடக்கலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.[2]

தொழிற்சாலைகள் நீதிமன்றங்கள் கல்வி நிலையங்கள் நகராட்சி கூடங்கள் பங்களாக்கள் போன்றவை kitchen பொறியாளர்களால் கட்டப்பட்ட சாதாரண கட்டமைப்புகள் ஆகும்

சில பொது கட்டிடங்கள் லண்டனில் உள்ளது போல் அல்லாமல் செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்டன. பல தேவாலயங்கள் லண்டனில் உள்ளதைப் போலவே கட்டப்பட்டு இருந்தன. உதாரணம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செயின்ட் மேரி சர்ச்.[2]

அதிகாரம் பிரிட்டிஷ் அரசிடமிருந்து, இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியிடம் வந்ததும் ரயில்வே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். கான்கிரீட், கண்ணாடி, வார்ப்பிரும்பு போன்றவை கட்டுமானத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்திய கட்டிடக்கலையும் இந்த கட்டிடக் கலையுடன் இணைந்தது. எனவே இந்தோ சராசனிக் கட்டிடக்கலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவானது [2]

கட்டிடக்கலை பாங்குகள்[தொகு]

அரசு அருங்காட்சியகம், எழும்பூர் , இந்தோ-சாராசானிக் பாணியில்மைந்தது.

அலங்கார வேலைப்பாடு முறை தோன்றுவதற்கு முன் சென்னையில் இந்தோ சராசனிக் பாணியிலான கட்டிடக்கலையும், மும்பையில் கோதிக் பாணி கட்டிடக்கலையும் ஆதிக்கம் செய்தன.[3]

சுதந்திரத்திற்குப் பின்[தொகு]

சுதந்திரத்திற்குப் பிறகு நவீன கால கட்டிடகலை சென்னையில் அதிகமானது.[4] 1959 ஆம் ஆண்டு எல் ஐ சி கட்டிடம் கட்டப்பட்டது.[5] இது நாட்டின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக அந்நேரத்தில் திகழ்ந்தது. சுண்ணாம்பு, செங்கல் கட்டுமானத்தில் இருந்து கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டிருந்தது.[6] சென்னை துறைமுகத்தில் வானிலை ரேடார் இருப்பதால் 10 கிலோ மீட்டர் சுற்றளவில், 60 மீட்டருக்கும் உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் மையப் பகுதியில் தரைப்பகுதி விகிதம் (FAR) 1.5 க்கும் குறைவாக உள்ளது.[7] இது பிற சிறு நகரங்களை விடவும் குறைவாக உள்ளது. இதன் விளைவாக நகரம் செங்குத்து வளர்ச்சியில் இல்லாமல், கிடைமட்டமாக விரிவடைகிறது. நகரத்தின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் செங்குத்து வளர்ச்சி(50 மாடிகள் வரை) அதிகப்படியாக காணப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Lakshmi, K. (28 June 2014). "RWH: Metrowater cracks the whip". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/chen-infra/rwh-metrowater-cracks-the-whip/article6156085.ece. பார்த்த நாள்: 10 Aug 2014. 
  2. 2.0 2.1 2.2 "Colonial Architecture". Architecture of India. Culturopedia.com. பார்த்த நாள் 30 Sep 2012.
  3. Do Chennai's art deco buildings have a future?. http://madrasmusings.com/Vol%2019%20No%206/do_chennais_art_deco_buildings_have_a_future.html. பார்த்த நாள்: 23 Sep 2012. 
  4. Sitalakshmi, K. R.. "Art Deco buildings in Chennai". The Hindu (The Hindu). http://www.hindu.com/pp/2006/08/05/stories/2006080500190400.htm. பார்த்த நாள்: 23 Sep 2012. 
  5. Srivathsan, A.. "Reaching the sky". The Hindu (The Hindu). http://www.hindu.com/pp/2007/07/14/stories/2007071450191100.htm. பார்த்த நாள்: 8 Oct 2011. 
  6. Kannan, Shanthi. "GREEN buildings". The Hindu (The Hindu). http://www.hindu.com/pp/2005/03/19/stories/2005031900110100.htm. பார்த்த நாள்: 8 Oct 2011. 
  7. Brueckner, Jan K. (2012). "Measuring Welfare Gains from Relaxation of Land-Use Restrictions: The Case of India’s Building-Height Limits" (PDF). பார்த்த நாள் 30 Sep 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_கட்டிடக்கலை&oldid=2701202" இருந்து மீள்விக்கப்பட்டது