சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
![]() | |
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1965 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முக்கிய நபர்கள் | ஆர். எசு. பட்டோலா, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | புதைபடிவ எரிமம் |
உற்பத்திகள் | பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு |
வருமானம் | ▲₹33,223 கோடி (US$4.36 பில்லியன்) (2011) |
நிகர வருமானம் | ▲₹511 கோடி (US$66.99 மில்லியன்) (2011) |
மொத்தச் சொத்துகள் | ₹7,988 கோடி (US$1.05 பில்லியன்) (2011) |
இணையத்தளம் | http://www.cpcl.co.in/ |
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Chennai Petroleum Corporation Limited) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1965ஆம் வருடம் இந்திய அரசு அமோகோ என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் மற்றும் ஈரானிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் உதவி கொண்டு இந்த ஆலையை நிறுவியது. இந்த ஆலையின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சமையல் எரி வாயு, நாப்தா, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், உயவு எண்ணெய், மெழுகு மற்றும் தார் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.
வரலாறு[தொகு]
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) முன்னதாக சென்னை சுத்திகரிப்பு லிமிடெட் (MRL) என அழைக்கப்பட்டு வந்தது. இது இந்திய அரசு (AMOCO)ற்றும் தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி (NIOC) இடையே 1965 ல் ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. CPCL சுத்திகரிப்பு நிறுவனம் 43 கோடி ரூபாய் செலவில் 27 மாதங்களில் ஒரு சாதனை நேரத்தில் வருடத்திற்கு 2.5 மில்லியன் டன்கள் (MMTPA) என்ற உற்பத்தி திறனுடன் நிறுவப்பட்டது. CPCL வருடத்திற்கு 11.5 மில்லியன் டன்கள் (MMTPA) ஒரு ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை கொண்டது.
முக்கிய தயாரிப்புகள்[தொகு]
- எல்.பி.ஜி (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு)
- மோட்டார் ஸ்ப்ரிட்
- மண்ணெண்ணெய்
- வான்சுழலி எரிபொருள்
- மெழுகு மற்றும்
- தார்