சென்னை இலௌகிக சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை இலௌகிக சங்கம் (Madras Secular Society) என்பது 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் இயங்கிய ஒர் அமைப்பு ஆகும். சுயசிந்தனை (Free Thought), பகுத்தறிவு (Rationalism), சமயசார்பின்மை (Secularism), இறைமறுப்பு (Atheism) போன்ற கொள்கைகளை இந்த அமைப்பு முன்னிறுத்தியது. தற்காலத்தில் தமிழ்ச் சூழலில் இக் கொள்கைகள் பரவ இந்த அமைப்பு முக்கிய பங்காற்றியது.

வரலாறு[தொகு]

தொடக்கத்தில் (1878-_-1888 காலப் பகுதியில்) இந்த அமைப்பு இந்து சுயக்கியானிகள் சங்கம் (Hindu Free Thought Union) என்ற பெயருடன் இயங்கியது. அக் காலத்தில் இந்து என்பது இந்தியர்களைப் பொதுவாகக் குறித்தது. சுயக்கியானிகள் என்பது சுயசிந்தனையாளர்கள். இந்த அமைப்பின் பெயர் 1886 இல் சென்னை இலௌகிக சங்கம் என்று மாற்றப்பட்டது.[1]

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 'காலனிய இந்தியாவில் சமய மறுப்பு இயக்கம் தமிழ்ச்சூழலில் மட்டும் தான் செயல்பட்டுள்ளது'[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_இலௌகிக_சங்கம்&oldid=3357735" இலிருந்து மீள்விக்கப்பட்டது