சென்னை ஆ. கண்ணன்
சென்னை ஆ. கண்ணன் | |
---|---|
பிறப்பு | 1920 சென்னை, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1 ஏப்ரல் 2019 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 98–99)
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
பணி | கருவி இசைக்கலைஞர் |
பெற்றோர் | ஆதிமூலம் (தந்தை) |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது கலைமாமணி விருது |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
இசைக்கருவி(கள்) | மிருதங்கம் |
சென்னை ஆ. கண்ணன் (Madras A. Kannan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞராவர். தாளத் துறையில் இவரது சிறந்த திறமையின் காரணமாக, இவர் பெரும்பாலும் ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.[1] இவர் சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]ஆ. கண்ணன் 1920 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தார். ஆறு வயதில், பீதாம்பர தேசாயிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டார்.[2] பின்னர் தஞ்சாவூர் ராமதாஸ் ராவின் சீடரானார்.[2] இவர் வீணை மற்றும் மிருதங்கத்தை பயின்றாலும், மிருதங்கத்தில் மட்டுமே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[2][3] தனது 12வது வயதில், மைசூர் அரண்மனையில் மகாராஜா நான்காம் கிருட்டிணராச உடையார் முன் மிருதங்கம் வாசித்தார்.[4] 1981 ஆம் ஆண்டில், இவர் தமிழ்நாடு அரசால் மாநிலக் கலைஞராக நியமிக்கப்பட்டார்.
சென்னை அனைத்திந்திய வானொலியில் பணியாளர் கலைஞராக பணியாற்றிய கண்ணன், இசைக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் கற்பித்துள்ளார்.[5] இவர் பல்வேறு மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆறாவது தலைமுறை மாணவர்கள் உட்பட மாணவர்களுக்கு விரிவான பயிற்சியை வழங்கியுள்ளார்.[6]
பதிவுகள்
[தொகு]தனது புதுமையான பாணி மற்றும் தாள திறன்களுடன் கர்நாடக இசையில் தனித்து நிற்கும் கண்ணன், நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக பாடகர்கள் மற்றும் இசைக் கருவியாளர்களுடன் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.[5] டைகர் வரதாச்சாரியார், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர், எம். எம். தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன், மதுரை எஸ். சோமசுந்தரம், டி. என். சேசகோபாலன், உ. ஸ்ரீநிவாஸ், என். ரவிகிரண், ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் பரவூர் சுந்தரம் ஐயர் உள்ளிட்ட பிரபல கருநாடக இசைக்கலைஞர்களுடன் இவர் இசைத்துள்ளார். மைசூரு தசரா இசை விழாவில் இவர் தொடர்ந்து பங்கேற்றார். 2017 வரை, கண்ணன் கச்சேரிகளில் கலந்து கொண்டார். பின்னர் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக கச்சேரிகளிலிருந்து விலகினார்.[2]
இறப்பு
[தொகு]கண்ணன் தனது 99 வயதில் 2019 ஏப்ரல் 01 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் காலமானார்.[7]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- கலைமாமணி விருது 1971 [8]
- சங்கீத நாடக அகாதமி விருது 2004 [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mridanga Samrat Shri Madras.A.Kannan passed away". Behindwoods. 2 April 2019. https://m.behindwoods.com/tamil-movies-cinema-news-16/mridanga-samrat-shri-madrasakannan-passed-away.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "മൃദംഗ വിദ്വാൻ മദ്രാസ് എ. കണ്ണൻ അന്തരിച്ചു" (in ml). Mathrubhumi. https://www.mathrubhumi.com/print-edition/india/chennai-1.3697561.
- ↑ "Noted mridangam vidwan Madras A Kannan passes away - News Today | First with the news". newstodaynet.com. https://newstodaynet.com/index.php/2019/04/02/noted-mridangam-vidwan-madras-a-kannan-passes-away/.
- ↑ "Veteran Mrigandam Vidwan passes away". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/nation/in-other-news/080419/veteran-mrigandam-vidwan-passes-away.html.
- ↑ 5.0 5.1 "Madras A. Kannan" (PDF).
- ↑ "Veteran Mrigandam Vidwan passes away". 8 April 2019. https://www.deccanchronicle.com/nation/in-other-news/080419/veteran-mrigandam-vidwan-passes-away.html."Veteran Mrigandam Vidwan passes away". தி டெக்கன் குரோனிக்கள். 8 April 2019.
- ↑ "Mridangam exponent Madras Kannan dead" இம் மூலத்தில் இருந்து 31 Jan 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220131143917/https://www.pressreader.com/india/the-hindu/20190402/281663961370346.
- ↑ "Veteran Mrigandam Vidwan passes away". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/nation/in-other-news/080419/veteran-mrigandam-vidwan-passes-away.html."Veteran Mrigandam Vidwan passes away". தி டெக்கன் குரோனிக்கள். 8 April 2019.
- ↑ "Mridangam exponent Madras Kannan dead" இம் மூலத்தில் இருந்து 2022-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220131143917/https://www.pressreader.com/india/the-hindu/20190402/281663961370346.. Archived from the original on 31 January 2022 – via PressReader.