சென்னை-திருவனந்தபுரம் அதிவிரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை-திருவனந்தபுரம் அதிவிரைவுத் தொடருந்து
Chennai–Thiruvananthapuram Superfast Express
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைஇயங்குகிறது
நிகழ்வு இயலிடம்கேரளம் மற்றும் தமிழ்நாடு
முதல் சேவை30 மே 2006
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்திருவனந்தபுரம்
இடைநிறுத்தங்கள்19
முடிவுசென்னை
ஓடும் தூரம்918 km (570 mi)
சராசரி பயண நேரம்16 மணி, 10 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்12695 / 12696
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)2 அடுக்கு குளிர்சாதனம், 3 அடுக்கு குளிர்சாதனம், படுக்கை வசதி,முன்பதிவற்றது
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
காணும் வசதிகள்பெரிய சன்னல்கள்
சுமைதாங்கி வசதிகள்இருக்கை அடியில்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇரண்டு
பாதைஅகலப்பாதை
வேகம்மணிக்கு 55 கிலோமீட்டர் சராசரியாக

சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டி (Chennai–Thiruvananthapuram Superfast Express) கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கும் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைக்கும் இடையில் பயணிக்கும் ஓர் அதிவிரைவு இரயில் ஆகும். 12695/12696 என்ற எண்களுடன் இந்த இரயில் இயங்குகிறது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இரயில் தினந்தோறும் சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்கிறது.[2]

பெட்டிகள்[தொகு]

சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டியில் மணிக்கு 110 கிலோமீட்டர் (மணிக்கு 68 மைல்) அதிகபட்ச வேகம் செல்லக்கூடிய வகையில் நிலையான இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையின் பெட்டிகள் உள்ளன. மொத்தமாக இந்த இரயில் 22 பெட்டிகளைக் கொண்டுள்ளது:

  • 1 இரண்டு அடுக்கு குளிரூட்டப் பெட்டி
  • 6 மூன்று அடுக்கு குளிரூட்டப் பெட்டிகள்
  • 10 படுக்கை வசதி பெட்டிகள்
  • 1 உணவகம்
  • 2 பதிவு செய்யப்படாத பயணிகள் பெட்டிகள்
  • 2 பொருட்கள் வைப்பறை

இந்தியாவில் உள்ள பெரும்பாலான இரயில் சேவைகளைப் போலவே, தேவையைப் பொறுத்து இந்திய ரயில்வே விருப்பப்படி இரயில் பெட்டிகளின் அமைப்பு திருத்தப்படும் வசதியும் நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.

நேரம்[தொகு]

சென்னை மத்திய தொடருந்து நிலையம் (15:25 பிற்பகல்) → திருவனந்தபுரம் சென்ட்ரல் (07:35 முற்பகல்)

திருவனந்தபுரம் சென்ட்ரல் (17:20 பிற்பகல்) → சென்னை மத்திய தொடருந்து நிலையம் (10:00 முற்பகல்)

முக்கிய நிறுத்தங்கள் :-

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-03-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "12695/M.G.R Chennai Central - Thiruvananthapuram Central SF Express". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 14 June 2021.