சென்னையில் சுற்றுலா
சென்னையில் சுற்றுலா (Tourism in Chennai) என்பது சென்னையிலுள்ள வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடங்கள், நீண்ட மணல் கடற்கரைகள், கலாச்சார மற்றும் கலை மையங்கள், பூங்காக்கள், பல பார்வையாளர்கள் கவரக்கூடிய இடங்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகும். சென்னை இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரம் ஆகும். சென்னையில் ஒரு குறிப்பிடத்தக்கச் சுற்றுலா இடம் என்றால் உண்மையில் மாமல்லபுரத்தில் உள்ளது. அதன் பழமையான கோயில்கள் மற்றும் 7 ஆம் நூற்றாண்டு பல்லவ அரசர்களின் பாறைச் சித்திரங்கள் போன்றவை உலக பாரம்பரியக் களமாகும்
2015இல் பயண வழிகாட்டியான லோன்லி பிளானட் சிறந்த 10 நகரங்களின் தரவரிசையில் சென்னை 9 வது இடத்தில் உள்ளது எனத் தெரிவித்தது.[1]
சுற்றுலா வருகை புள்ளிவிவரங்கள்
[தொகு]தொடர்ந்து 2010 முதல் 2012 வரை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளால் இந்தியாவில் பெருமளவு பார்வையிடப்பட்ட நகரமாக சென்னை இருந்தது.[2][3][4] புது தில்லி மற்றும் மும்பை போன்ற இடங்களிலுள்ள பாரம்பரியக் களங்களைக் காணும் பார்வையாளர்களை விடச் சென்னை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் போன்ற இடங்களிலும் பயணிகள் அதிக அளவில் பயணிக்கின்றனர். மேலும் மருத்துவச் சுற்றுலா பயணிகளும் சென்னைக்கு அதிக அளவில் வருகின்றனர்.
2011ஆம் ஆண்டில், உலகின் முதல் 100 நகரங்களுக்கான தரவரிசையில் 3,174,500 சுற்றுலாப் பயணிகளோடு நாற்பத்தொன்றாவது இடத்தை சென்னை பெற்றது.[5] இது 2009ஆம் ஆண்டில் 2,059,900 சுற்றுலாப் பயணிகள் பயணித்த கணக்கிலிருந்து 2010ஆம் ஆண்டில் 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. தில்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வருகை புரியும் இடமாகச் சென்னை உள்ளது.[6]
2007ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்னையைப் பார்வையிட்டனர்.[7] 2012ஆம் ஆண்டில், 3,535,200 சுற்றுலாப் பயணிகள் சென்னைக்கு பயணித்துள்ளனர். உலகிலேயே 38ஆவது அதிகப் பார்வையிடும் நகரமாக இந்தியாவும், இந்தியாவில் அதிக அளவில் பார்வையிடப்பட்ட நகரமாகச் சென்னையும் உள்ளது.[4]
2013ஆம் ஆண்டு, தில்லி மற்றும் மும்பை, ஆகிய நகரங்களை விட அதிக அளவில் வெளிநாட்டு பார்வையாளர்கள் சென்னைக்கு வந்தனர். அந்த வருடம் சென்னை 3,581,200 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. இது 2012ஐக் காட்டிலும் 1.1 சதவிகிதம் அதிகமாக இருந்தது.[8] தொடர்ந்து, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் அதிக அளவில் வெளிநாட்டவர்கள் வருகை புரியும் நகரமாக இருந்த சென்னை, இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.[9][10] 2015ஆம் ஆண்டில் உலகில் அதிகம் பயணிகள் வருகை புரியும் நகரத்தில் 43வது நகரமாகவும் சென்னை இருந்தது. இது 2014 ஆம் ஆண்டின் வருகையை விட 10 சதவிகிதம் அதிகமாகும்.[10]
ஈர்ப்புகள்
[தொகு]கடற்கரைகள்
[தொகு]- மெரீனா கடற்கரை என்பது 13 கிலோமீட்டர் நீளமான நகர்ப்புறக் கடற்கரையாகும், இது வங்காள விரிகுடாவின் வடக்கே புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து தெற்கில் உள்ள பட்டினப்பாக்கம் வரை நீள்கிறது. இந்தியாவின் நீண்ட கடற்கரை மற்றும் உலகின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றாகும். மேலும், வார இறுதிகளில் சுமார் 50,000 பார்வையாளர்களை இது ஈர்க்கிறது. மெரீனாவில் உள்ள இடங்கள் சென்னை கலங்கரை விளக்கம், எம். ஜி. ஆர் நினைவிடம், அண்ணா சதுக்கம் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் போன்றவையாகும். மெரீனாவின் 6 கி.மீ நடைபயிலும் இடத்தில் காமராசர் மகாத்மா காந்தி, அன்னி பெசண்ட், இராபர்ட்டு கால்டுவெல், திருவள்ளுவர், மற்றும் சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ளன.
- மெரினா முடிவடையும் இடத்தில், பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படும் எலியட்ஸ் கடற்கரை தொடங்குகிறது. இக்கடற்கரையானது அமைதியான வளிமண்டலத்திற்குப் புகழ் பெற்றுள்ளது. எலியட் கடற்கரையில் கடலில் மூழ்குவதில் இருந்து மற்றவர்களை காப்பாற்றுவதில் தனது வாழ்வை இழந்த டச்சு நாட்டுக்காரர் கார்ல் சுமித் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Chennai in Lonely Planet 2015 list of top 10 cities to visit". 22 October 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
- ↑ "Top 100 Cities Destination Ranking 2010". Euromonitor International. Archived from the original on 27 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Chennai High: City gets most foreign tourists". The Times of India (27 August 2010). Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-30.
- ↑ 4.0 4.1 "Top 100 Cities Destination Ranking 2012". Euromonitor International. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
- ↑ "Top 100 Cities Destination Ranking 2011". Euromonitor International. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2013.
- ↑ "Top 100 Cities Destination Ranking 2009". Euromonitor International. Archived from the original on 5 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.timeofindia.com Times of India, 2 June 2008 [not in citation given]
- ↑ "Top 100 Cities Destination Ranking 2013". Euromonitor International. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
- ↑ "Top 100 City Destinations Ranking 2014" (PDF). Euromonitor International. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
- ↑ 10.0 10.1 "Top 100 City Destinations Ranking 2015" (PDF). Euromonitor International. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.