சென்னையிலுள்ள மதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சென்னையில் மதங்கள் (2011)[1]

  சைனம் (1.11%)
  பிற மதம் (0.04%)
  மதமில்லாதவர் (0.83%)

சென்னையின் மதங்கள் (Religion in Chennai) என்பது மதப்பிரிவுகளில் பிரதானமாக இந்து மதம், இசுலாம், கிறித்துவம், சீக்கியம், சைன மதம், பௌத்தம், மற்றும் சொராட்ரியம் போன்ற பல்வேறு மதங்கள் பின்பற்றிய சமயக் கோட்பாடுகளைக் கொண்டது. மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவைப் போலவே பல்வேறு இந்திய இனத்தாரைச் சேர்ந்த பல்வேறு சமூகங்களுள் ஒன்றடக்கியதாகும்.[2] இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றி வருகின்றனர். மற்ற இந்திய நகரங்களைப் போலவே, சென்னையிலும் இந்துக்கள் அதிகம் உள்ளனர். சென்னை நிறைய மத நம்பிக்கைகளுக்கு மையமாக உள்ளது. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் பெரும்பான்மையாகவும் (81.3%), முஸ்லிம்கள் (9.4%), கிறித்துவர் (7.6%), சைனர்கள் (1.1%), சீக்கியர்கள் (0.06%), பௌத்தர்கள் (0.04%) என்ற எண்ணிக்கையில் அடங்குவர்.[3]

இந்து மதம்[தொகு]

இந்து மதம் சென்னையின் பூர்வீக மதமாகும். நாடெங்கும் உள்ளதுபோல் இந்நகரிலும் இந்து மதம் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. சென்னை நகரின் பகுதிகளாக அமைந்துள்ள கோவில் நகரங்களான மயிலாப்பூர் , திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை மற்றும் திருவான்மியூர் போன்ற இடங்களுக்கு நாயன்மார்கள் என்று அழைக்கப்பட்ட சைவ துறவிகள் வருகை புரிந்தனர். வாயிலார் நாயனார் நாயனார் என்பவர் மைலாப்பூரில் பிறந்து வளர்ந்துள்ளார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல்களில் மயிலாப்பூரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இசுலாம்[தொகு]

அண்ணா சாலையிலுள்ள ஆயிரம் விளக்கு மசூதி

இஸ்லாம் சென்னையின் இரண்டாவது பெரிய மதமாகும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சென்னையின் மக்கள்தொகையில் 9.4 சதவீத மக்கள் இஸ்லாமியர்களாவர். சென்னை முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் சுன்னி பிரிவினர் ஆவர். சியா இசுலாம் பிரிவினர் சிறிய அளவில் இருக்கின்றனர். சென்னையில் பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் தமிழ் பேசுபவர்கள் என்றாலும், ஒரு சிறிய பிரிவினர் தமிழ் கலந்த உருது மொழி பேசுபவர்களாக காணப்படுகின்றனர்.

கிறித்துவம்[தொகு]

சாந்தோம் தேவாலயம்

சென்னைக்கு கிறித்தவ அப்போஸ்தலர் புனித தோமா என்பவரால் கிறித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது, பொது ஊழி 52 மற்றும் பொ.ஊ. 70ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பிரசங்கிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[4][5][6] இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான புனித தோமையார் மலை இறந்த பின்னர் நகரத்தின் தெற்குப் பகுதியான மயிலாப்பூரில் புனித தோமையார் மலையில் புதைக்கப்பட்டார். [7] [8] நகரத்தின் மிகப் பழமையான கல்லறையான சான் தோம் பசிலிக்கா என்ற கல்லறை 16 ஆம் நூற்றாண்டில், போர்த்துகீசிய ஆராய்ச்சியாளர்களால் புனித தோமையார் கல்லறைக்கு அருகில் கட்டப்பட்டது. [9] சென்னையில் மற்ற இந்திய நகரங்களைவிட சென்னையில் 7.6 சதவிகிதத்திற்கும் அதிகமான கிறித்துவர்கள் வசிக்கின்றனர்.

சீக்கியம்[தொகு]

சீக்கியர்கள் நகரம் தோன்றிய போதே சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ பதிவுகள் ஏதும் இல்லை என்பதால் அறியப்படவில்லை. இருப்பினும், இந்தியப் பிரிப்புக்கு முன்பும், அதற்குப் பின்னரும் அவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 2012ஆம் ஆண்டளவில், சுமார் 300 சீக்கியக் குடும்பங்கள் நகரத்தில் இருந்தன. 1949 இல் நிறுவப்பட்ட ஸ்ரீகுருநானக் சத்சங்க சபா, சமூக, மத மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளுக்கான ஒரு மையமாக இருந்துள்ளது. இது, சிறப்பான சந்தர்ப்பங்களில் மற்றும் திருவிழாக்களின் போதும் நகரில் சீக்கியர்களின் குடும்பங்கள் கூடும் பொதுவான மையமாகும்.[10]

சமணம்[தொகு]

நகரத்தில் வடக்கு இந்திய மற்றும் தமிழ்ச் சைனர் சமூகத்தினர் இருவரும் உள்ளனர். சுமார் 100 சைனக் கோயில்கள் வடக்கிந்திய சைனர்களால் கட்டப்பட்டிருக்கிறது, அதே நேரத்தில் சுமார் 1,500 தமிழ்ச் சைன குடும்பங்களுக்கு 18 தமிழ் சைனக் கோயில்களே உள்ளன. [11]

பௌத்தம்[தொகு]

சென்னை புத்தர் கோயிலில் உள்ள புத்தர் சிலை

நகரத்தின் ஒரே பௌத்த ஆலயம், இலங்கை மகாபோதி மையம், இது எழும்பூரில் அமைந்துள்ளது.

சொராட்டிரியம்[தொகு]

இராயபுரம் தீக்கோவில்—சென்னையின் ஒரே பார்சி கோயில்

முதன்முதலில் பார்சிகள் 1809 இல் கூர்க் பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். இவர்களால் 1909ஆம் ஆண்டு இராயபுரம் தீக்கோவில் கட்டப்பட்டது. 2010 ஆம் ஆண்டளவில், சென்னையில் சுமார் 250 பார்சிகள் இருந்தனர். அவர்களில் பலர் ராயபுரம் பகுதியில் வாழ்கின்றனர்.[12][13]

மற்ற மத அமைப்புகள்[தொகு]

சென்னை என்பது பிரம்மஞான சபையின் சர்வதேச அடிப்படை இடமாகும். இது உலக மதங்கள் மற்றும் இடைவிடா பேச்சு உரையாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மீக அமைப்பாகும். 1882 ஆம் ஆண்டு முதல் "சென்னை பிரம்மஞான சபை" என்கிற தத்துவஞான சமுதாயத்தின் தலைமையகமாக விளங்குகிறது.[14]

குறிப்புகள்[தொகு]

  1. "Population By Religious Community - Tamil Nadu" (XLS). Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  2. "The magic of melting pot called Chennai". The Hindu. 19 December 2011. http://www.thehindu.com/news/cities/chennai/article2728177.ece. பார்த்த நாள்: 29 December 2012. 
  3. "Area and Population" (PDF). Government of Tamil Nadu. pp. 1–3. Archived from the original (PDF) on 30 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. The Encyclopedia of Christianity, Volume 5 by Erwin Fahlbusch. Wm. B. Eerdmans Pudgfh¡blishing - 2008, Page 285. ISBN 978-0-8028-2417-2.
  5. A. E. Medlycott, (1905) "India and the Apostle Thomas"; Gorgias Press LLC; ISBN 1-59333-180-0.
  6. Thomas Puthiakunnel, (1973) "Jewish colonies of India paved the way for St. Thomas", The Saint Thomas Christian Encyclopedia of India, ed. George Menachery, Vol. II.
  7. "Saint Thomas (Christian Apostle) -- Encyclopædia Britannica". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014.
  8. The Oxford Dictionary of Saints, Fifth Edition Revised. Oxford University Press. 1997. https://archive.org/details/oxford0000hopk. 
  9. "Basilica of the National Shrine of St.Thomas". SanThomeChurch.com. Archived from the original on 4 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Sampath, Janani (25 March 2013). "'We call ourselves Tamilian Punjabis'". The New Indian Express (Chennai: Express Publications). http://newindianexpress.com/cities/chennai/article1515452.ece. பார்த்த நாள்: 30 March 2013. 
  11. Jain, Mahima (28 December 2013). "Tamil Jain?". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/features/magazine/tamil-jain/article5504164.ece. பார்த்த நாள்: 27 April 2014. 
  12. "Parsi community celebrates 100 years of fire temple". The Hindu (Chennai: The Hindu). 11 July 2010 இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100714233635/http://www.hindu.com/2010/07/11/stories/2010071162800500.htm. பார்த்த நாள்: 24 April 2014. 
  13. Mathai, Kamini (12 July 2010). "Parsis go all out to celebrate milestone in Chennai". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Parsis-go-all-out-to-celebrate-milestone-in-Chennai/articleshow/6156672.cms. பார்த்த நாள்: 24 April 2014. 
  14. William Forsell Kirby (January 1885). "The Theosophical Society". Time (London) XII (1): 47-55. (London: Swan Sonnenschein). இணையக் கணினி நூலக மையம் 228708807. Google Books Search. Retrieved 2011-01-12. Profile by the entomologist and folklorist William Forsell Kirby.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னையிலுள்ள_மதங்கள்&oldid=3740748" இலிருந்து மீள்விக்கப்பட்டது