சென்னையின் வரலாற்று காலவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னையின் வரலாற்று காலவரிசை (Timeline of Chennai history) சென்னையின் வரலாற்று நிகழ்வுகளை காட்டும் கால வரிசை:

முன் வரலாறு[தொகு]

17ஆம் நூற்றாண்டிற்கு முன்னர்[தொகு]

17ஆம் நூற்றாண்டில்[தொகு]

 • 1612: வட சென்னையின் பழவேற்காடு பகுதியில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியினர் வணிக மையத்தை நிறுவினர்.
 • 1626: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர் பழவேற்காட்டிற்கு வடக்கே 35 மைல் தொலைவில் கிழக்கு கடற்கரை கிராமத்தில் தொழிற்சாலைகளை நிறுவினர்.
 • 1637: பிரான்சிஸ் டே எனும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் புதிய குடியிருப்புகளை நிறுவ புறப்பட்டார்.
 • 1639: 22 ஆகஸ்டு அன்று, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர், காளாத்தி நாயக்க மன்னர் தமர்லா வெங்கடாத்திரி நாயக்கரிடமிருந்து, சென்னை கடற்கரையை ஒட்டி மூன்று மைல் நீளம் கொண்ட பகுதியை விலைக்கு வாங்கி, சென்னையில் தங்கள் வணிக மையத்தை நிறுவினர்.[4] புனித ஜார்ஜ் கோட்டை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னையில் போர்த்துகேயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரித்தானியர்களின் மக்கள்தொகை 10,000 ஆக உயர்ந்தது. உள்ளூர் மக்களின் தொகை குறைந்தது.
புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் குடியிருப்புகள் கொண்ட வரைபடம்

18ஆம் நூற்றாண்டு[தொகு]

18ம் நூற்றாண்டில் வண்ணம் தீட்டபப்ட்ட புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
1746 மதராஸ் சண்டையில் சென்னையை ஆங்கிலேயர்களிடமிருந்து, பிரான்சுப் படைகள் கைப்பற்றல்
 • 1701: முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் தௌலத் கான் புனித ஜார்ஜ் கோட்டையை தாக்குதல். இருப்பினும் பிரித்தானியர்கள் கோட்டையை தற்காத்துக் கொண்டனர்.[7]
 • 1708: திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கொட்டிவாக்கம் மற்றும் சாத்தன்காடு ஆகிய ஐந்து கிராமங்கள் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டது.
 • 1711: முதல் அச்சகம் நிறுவப்பட்டது.
 • 1751: கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் தண்டையார் பேட்டையை கைப்பற்றினர்.[7]
 • 1721: நவம்பர் 13 14 நாட்களில் சென்னையைப் பெரும் புயல் தாக்கியது.
 • 1726: 300 அடி உயர புனித தோமையார் மலைக்குச் செல்ல 134 படிக்கட்டுகள் கட்டப்பட்டது.[7]
 • 1735:சிந்தாதரிப் பேட்டை குடியிருப்புப் பகுதி நிறுவப்பட்டது.
 • 1742:வேப்பேரி, பெரியமேடு, பெரம்பூர் மற்றும் புதூர்பாக்கம் பகுதிகள் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.
 • 1744: கர்நாடகப் போர்களுக்கு தலைமை தாங்கிய இராபர்ட் கிளைவ், புனித ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனி எழுத்தராக பணியில் சேர்ந்தார்.[7]
 • 1746: பிரான்சு கடற்படை அதிகாரி பெட்ராண்ட் பிரான்காய்ஸ் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றினார்.[7]
 • 1749: ஆக்ஸ்-லா-சாப்பெல்லா ஒப்பந்தப்படி, சென்னையை மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.[7] சாந்தோம் மற்றும் மைலாப்பூர் பகுதிகள் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது
 • 1758: பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி படைத்தலைவர் சென்னையை முற்றுகையிட்டார்.
 • 1759: சென்னை முற்றுகை முடிவுற்றது.
 • 1760:ஜார்ஜ்டவுன் பகுதிகள் சீரமைக்கப்பட்டது.[8]
 • 1767: ஐதர் அலி சென்னை முற்றுகையிட்டார்.
 • 1768:ஆற்காடு நவாப் சேப்பாக்கத்தில், கலச மஹால் கட்டினார்.
 • 1769: இரண்டாம் முறையாக ஐதர் அலி சென்னைய முற்றுகையிட்டார்
 • 1772: புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்ட மருத்துவமனை, இராயப்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டது.[6] ஏழு குளங்கள் நிறுவி, சென்னை நகரத்திற்கு குடிநீர் வழங்கப்பட்டது.[8]
 • 1777: வீரப்பப் பிள்ளை புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தவாலாக நியமிக்கப்பட்டார்.
 • 1783:புனித ஜார்ஜ் கோட்டை செப்பனிடப்பட்டது.
 • 1784: சென்னையின் முதல் செய்தித்தாள் மெட்ராஸ் கூரியர் நிறுவப்பட்டது.
 • 1785: முதல் அஞ்சலகம் துவக்கப்பட்டது.
 • 1786: வில்லியர் பெர்ட்ரி என்பவர் தனியார் வானிலை ஆய்வு மையத்தை நிறுவினார்.[9]
 • 1788: தாமஸ் பாரி என்பவர் சென்னை பாரிமுனை பகுதியில் வணிக மையத்தை நிறுவினார்.[8] 1792:பிரித்தானிய கம்பெனியினர் வானிலை மையத்தை நிறுவினர். பின்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் எனப் பெயராயிற்று.[9]
 • 1794: கிண்டியில் நில அளவை பயிற்சிப் பள்ளியை நிறுவினர். பின்னர் இவ்வளாகம் அண்ணா பல்கலைக்கழகம் ஆயிற்று.[8] ஐக்கிய அமெரிக்காவின் வணிகர் வில்லியம் அப்பேட் சென்னை அமெரிக்கா தூதரகத்தின் முதல் தூதராக நியமிக்கப்பட்டார்.[10]
 • 1795: திருவல்லிக்கேணியில் வாலாஜா மசூதி கட்டப்பட்டது.[8]
 • 1798:16 குடியிருப்புகள் கொண்ட புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 69 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு சென்னை நகரம் விரிவானது.[5]

19ஆம் நூற்றாண்டு[தொகு]

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகம், ஆண்டு 1804

20ஆம் நூற்றாண்டு[தொகு]

1909ல் சென்னை நகரம்
1921ல் சென்னை நகரத்தின் வரைபடம்
1955ல் சென்னை நகரத்தின் வரைபடம்

21ஆம் நூற்றாண்டு[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Encyclopedia of Christianity, Volume 5 by Erwin Fahlbusch. Wm. B. Eerdmans Publishing – 2008, Page 285. ISBN 978-0-8028-2417-2.
 2. A. E. Medlycott, (1905) "India and the Apostle Thomas"; Gorgias Press LLC; ISBN 1-59333-180-0.
 3. Thomas Puthiakunnel, (1973) "Jewish colonies of India paved the way for St. Thomas", The Saint Thomas Christian Encyclopedia of India, ed. George Menachery, Vol. II.
 4. S. Muthiah (21 August 2006). "Founders' Day, Madras". Hindu Times. பார்த்த நாள் 28 Jan 2009.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 "Structure of Chennai". Chapter 1. CMDA. பார்த்த நாள் 24 Feb 2013.
 6. 6.0 6.1 6.2 6.3 "1639 a.d. to 1700 a.d.". History of Chennai. ChennaiBest.com. பார்த்த நாள் 20 Jan 2013.
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 "1701 A.D. to 1750 A.D.". History of Chennai. ChennaiBest.com. பார்த்த நாள் 20 Jan 2013.
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 "1751 A.D. to 1800 A.D.". History of Chennai. ChennaiBest.com. பார்த்த நாள் 20 Jan 2013.
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 "History of Old Madras Observatory". பார்த்த நாள் 16 Oct 2011.
 10. "History". US Consulate Chennai. பார்த்த நாள் 15 Jan 2012.
 11. Haripriya, V. (25 August 2008). "Tracing its roots". Ergo 360°. http://www.goergo.in/?p=2212. பார்த்த நாள்: 3 Dec 2011. 
 12. "A day in Chennai". Chennai Magic. மூல முகவரியிலிருந்து July 8, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 Sep 2012.
 13. Muthiah, S. (4 July 2010). "Madras Miscellany: The century-old Parsi temple". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/features/metroplus/madras-miscellany-the-centuryold-parsi-temple/article499975.ece. பார்த்த நாள்: 27 Apr 2014. 
 14. "About Us". Sri Lanka Deputy High Commission in Southern India. பார்த்த நாள் 12 Feb 2012.
 15. "Corporate Information—History". Ministry of Foreign Affairs, Malaysia. பார்த்த நாள் 5 Feb 2012.
 16. "Greetings from the Consul-General, Mr. Kazuo Minagawa". Consulate-General of Japan in Chennai. பார்த்த நாள் 1 Mar 2012.
 17. "History of Singapore Immigration". Immigration & Checkpoints Authority, Government of Singapore. பார்த்த நாள் 5 May 2012.
 18. "Australian Minister for Trade opens Australian Consulate-General in Chennai". UTSAV Australia: Australian Trade Commission—India (26 February 2007). பார்த்த நாள் 19 Jul 2012.
 19. "Asia's Deadly Waves". The New York Times (The New York Times). https://www.nytimes.com/packages/khtml/2004/12/26/international/20041227_QUAKE_FEATURE.html. பார்த்த நாள்: 26 Oct 2011. 
 20. "60 Years of Friendship, Thailand–India" (PDF). பார்த்த நாள் 14 Feb 2012.

வெளி இணைப்புகள்[தொகு]