சென்னைப் பூங்காக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னை மாநகரின் நிலப்பரப்பில் 4.5% மட்டுமே பசுமையாக உள்ளதென 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்நகரில் 26.6 சதுர கிலோமீட்டர் பகுதியில் மட்டுமே மரங்கள் உள்ளதெனவும் அதில் 2.71 சதுர கிலோமீட்டர் பகுதியிலான மரங்கள் கிண்டி தேசியப் பூங்காவில் உள்ளதெனவும் தெரிவித்துள்ளனர். தெற்கில் பெரும்பகுதி அடையாறு ஆற்றுப்பகுதி என்பதால் மரங்கள் குறைவாக உள்ளது.

பூங்காக்களின் புள்ளிவிவரம்[தொகு]

டிசம்பர் 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 396 பூங்காக்கள் இருந்தன. பழைய சென்னை மாநகராட்சியில் ஏழு மண்டலத்தில் இருந்த 260 பொதுமக்கள் பூங்காக்களில் 154 சாலைத்திட்டுப் பூங்காக்களும் நகரின் மையப்பகுதியில் 105 பூங்காக்களும் இருந்தன. அப்பூங்காக்களைச் சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது. அதிலும் சில பூங்காக்கள் பராமரிப்பின்றி இருக்கின்றது. சென்னை மாநகராட்சியில் புதிதாக எட்டு மண்டலத்தில் 265 பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

2011ஆம் ஆண்டுவரை 260 பூங்காக்கள் இருந்தன. அதன்பின் 200 புதிய பூங்காக்களைத் திறக்கத் திட்டமிடப்பட்டது. 2014ஆம் ஆண்டு நிலவரப்படி 87 புதிய பூங்காக்கள் திறக்கப்பட்டும் எஞ்சிய பூங்காக்கனளத் திறப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

சென்னையிலுள்ள சில முக்கிய பூங்காக்களின் பட்டியல்[தொகு]

 • அண்ணாநகர் டவர் பூங்கா (15.35 ஏக்கர் )
 • டாக்டர். அன்னிபெசண்ட் பூங்கா
 • அசோக் நகர் பூங்கா
 • போகன் வில்லா பூங்கா
 • சென்னை மாநகராட்சி பூங்கா
 • சேத்துப்பட்டு ஏரி பூங்கா
 • ஜீ.பிளாக் பூங்கா
 • காந்தி பூங்கா
 • கில் நகர் பூங்கா
 • கிண்டி தேசியப் பூங்கா
 • கோடம்பாக்கம் தேசிய நெடுசாலை பூங்கா
 • சுதந்திரப் பூங்கா
 • இந்திரா நகர்
 • ஜீவா பூங்கா
 • கலைஞர் கருணாநிதி பூங்கா
 • லேபர் கலானி பூங்கா
 • மாதவரம் தாவரவியல் பூங்கா
 • மாத்தூர் எம்.எம்.டி.ஏ பூங்கா
 • மேதினப்பூங்கா
 • மேயர் சுந்தரராவ் பூங்கா
 • நாகேஸ்ராவ் பூங்கா
 • நாடேசன் பூங்கா
 • நேரு பூங்கா
 • நெசப்பாக்கம் பூங்கா
 • பனகல் பூங்கா
 • பெரம்பூர் மேம்பாலம் பூங்கா
 • ராஜீவ் காந்தி பூங்கா
 • சத்தியவாணி முத்து பூங்கா
 • தலைமைச் செயலகப் பூங்கா
 • செந்தமிழ் பூங்கா
 • சிவன் பூங்கா
 • சூரிய நாராயணன் பூங்கா
 • திரு.வி.க பூங்கா
 • திருவள்ளுவர் பூங்கா
 • வள்ளுவர் கோட்டம் பூங்கா
 • வாசுகி பூங்கா

மேற்கோள்கள்[தொகு]