சென்னைப் பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
CGHSS MH Road 001.jpg

சென்னைப் பள்ளிகள், சென்னை மாநகராட்சி, கல்வித் துறையின் [1] கீழ் இயங்கிவரும் பள்ளிகள். சென்னை மாநகராட்சி பள்ளிகள் என்றழைக்கப்பட்டவை தற்போது சென்னைப் பள்ளிகள் [2] என்று அழைக்கப்படுகின்றன.
ஏழை எளிய, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்களும் தரமான, சிறந்த கல்வி பெறுவதையே தனது லட்சியமாக கொண்டு சென்னைப் பள்ளிகள் செயலாற்றி வருகின்றன.[3] இப்பள்ளிகளில் சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையும் மாணவர் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகின்றன.

தோற்றம்[தொகு]

1912ம் ஆண்டு அன்றைய சென்னை நகராண்மைக் கழகம், சென்னை நகரம் முழுவதும் 40 ஆரம்பப் பள்ளிகளுடன் தனது கல்வித் துறையை தொடங்கியது. இன்று 32 மேல்நிலைப் பள்ளிகள், 35 உயர்நிலைப் பள்ளிகள், 97 நடுநிலைப் பள்ளிகள், 120 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 30 மழலையர் பள்ளிகள் என வளர்ச்சியடைந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பாடங்கள் போதிக்கப்பட்டுவருகின்றன. மேலும், வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் முற்றிலும் உருது வழி உயர்நிலைப் பள்ளி ஒன்றும், இராயபுரம்-ஆஞ்சநேய நகர் பகுதியில் முற்றிலும் தெலுங்கு வழி உயர்நிலைப் பள்ளி ஒன்றும் செயல்பட்டுவருகின்றது. மேலும், 3 தெலுங்கு தொடக்கப்பள்ளிகள், 12 உருது தொடக்கப் பள்ளிகள், 7 உருது நடுநிலைப் பள்ளிகளும் உள்ளது. சில மேல்நிலைப் பள்ளிகளில் தெலுங்குவழிப் பாடப்பிரிவுகளும் செயல்பட்டுவருகின்றது.

நிர்வாகம்[தொகு]

சென்னைப் பள்ளிகள், சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. கல்வித் துறையின் உயர் நிர்வாக அலுவலர்- இணை ஆணையர் (கல்வி). தற்போதைய இணை ஆணையர் (கல்வி) லலிதா ராஜேந்திரன், இ.ஆ.ப வின் கீழ் 1 கல்வி அலுவலர், 10 உதவிக்கல்வி அலுவலர்கள், கல்வித் துறையை நிர்வகித்து வருகின்றனர்.

பதவி பெயர்
கல்வி அலுவலர் பி. பேரின்பராஜ்
உதவிக் கல்வி அலுவலர் (மண்டலம் 2) பாரதிதாசன்
உதவிக் கல்வி அலுவலர் ஜெபசிங் சாமுவேல்
உதவிக் கல்வி அலுவலர் ரஞ்சனி
உதவிக் கல்வி அலுவலர் (மண்டலம் 4) பாலசுப்ரமணியன்
உதவிக் கல்வி அலுவலர் டி. சுப்பிரமணியன்
உதவிக் கல்வி அலுவலர் ஈ. கோவிந்தசாமி
உதவிக் கல்வி அலுவலர் அப்துல் ரஷீது
உதவிக் கல்வி அலுவலர் ஜெ. வசந்தி

ஆசிரியர்கள்[தொகு]

சென்னைப் பள்ளிகள் அனைத்திலும், திறமையான, அனுபவமும், கல்வித் தகுதியும் உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4325 ஆசிரியர் பணியிடங்களில் 2009-2010ம் கல்வி ஆண்டில் 3403 பணியிடங்களில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2010-2011ம் கல்வியாண்டில் மேலும் சில சிறப்பாசிரியர் (இசை, உடற்கல்வி ஆசிரியர்) பணியிடங்கள் நிரப்பபட்டது.[4] தலைமையாசிரியர் பணியிடங்கள், மூத்த ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. மற்ற ஆசிரியர் பணியிடங்கள் 50% பதவி உயர்வு மூலமும், 50% பணியிடங்கள் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நிரப்பப்படுகின்றது. தமிழக அரசின் கல்விக் கொள்கையின் படி 1:40 அதாவது 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, நிரப்பப்பட்டு வருகின்றது.

ஆசிரியர் பணியிட விவரம்

பதவி பணியிடங்கள்
தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் 120
இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியர் 97
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 37
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 30
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 291
பட்டதாரி ஆசிரியர்கள் 666
தமிழாசிரியர்கள் 196
கணினி ஆசிரியர்கள் 20
இடைநிலை ஆசிரியர்கள் 2719
உடற்கல்வி இயக்குனர்கள் 8
உடற்கல்வி ஆசிரியர்கள் 82
இசை ஆசிரியர்கள் 22
ஓவிய ஆசிரியர்கள் 7
கைத் தொழில் ஆசிரியர்கள் 30

மாணவர்கள்[தொகு]

சென்னைப் பள்ளிகளின் 80% மேற்பட்ட மாணவர்கள், ஏழை எளிய குடும்பங்களை சார்ந்தவர்களே. இவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.10,000 முதல் 36,000 வரை மட்டுமே. குறிப்பாக 10ம் வகுப்பு வரை பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள். 10% மாணவர்கள், சாலை ஓரங்களில் வசிப்பவர்களின் பிள்ளைகள். சுமார் 18% மாணவர்களே நடுத்தர குடும்பங்களை சார்ந்தவர்கள், 2% மாணவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுயதொழில் செய்பவர்களின் பிள்ளைகள். மேல்நிலைப் பள்ளிகளில், குறிப்பாக சென்னைப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மாதவரம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை ஆகியவற்றில் மட்டுமே இந்த 2% மாணவர்கள் உள்ளனர். பல விதமான சமூக, பொருளாதார சூழ்நிலைகளில் மாணவர்கள் சென்னைப் பள்ளிகளில் பயின்றாலும், அனைத்து மாணவர்களும் சமமாகவே நடத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து விதமான சென்னைப் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சென்னைப் பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம்.

மேல்நிலைப் பள்ளிகள்[தொகு]

பள்ளி முகவரி
சென்னை மேனிலைப் பள்ளி,, டி.எச் ரோடு 731 தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை
சென்னை மேனிலைப் பள்ளி அப்பாசாமி தெரு
சென்னை மேனிலைப் பள்ளி பட்டேல் நகர்
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி புத்தா தெரு, கொருக்குப் பேட்டை
சென்னை மேனிலைப் பள்ளி பந்தர் கார்டன் தெரு, பெரம்பூர்
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி மாதவரம் நெடுஞ்சாலை, பெரம்பூர்
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி மார்க்கெட் தெரு, பெரம்பூர்
சென்னை மேனிலைப் பள்ளி கொளத்தூர்
சென்னை மேனிலைப் பள்ளி பாலவாயல் தெரு, அயனாவரம்
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி இராட்லர் தெரு, சூளை
சென்னை ஆண்கள் மேனிலைப் பள்ளி கங்காதீஸ்வரர் கோயில் தெரு, புரசைவாக்கம்
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி புல்லா அவின்யூ, செனாய் நகர்
சென்னை மேனிலைப் பள்ளி சுப்பாராயன் தெரு
சென்னை மேனிலைப் பள்ளி சூளைமேடு
சென்னை மேனிலைப் பள்ளி புலியூர், கோடம்பாக்கம்
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி நுங்கம்பாக்கம்
சென்னை ஆண்கள் மேனிலைப் பள்ளி நுங்கம்பாக்கம்
சென்னை மேனிலைப் பள்ளி விருகம்பாக்கம்
சென்னை மேனிலைப் பள்ளி கோயம்பேடு
சென்னை மேனிலைப் பள்ளி நெசப்பாக்கம்
சென்னை மேனிலைப் பள்ளி எம்.ஜி.ஆர். நகர்
சென்னை மேனிலைப் பள்ளி மடுவின்கரை, கிண்டி
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி மேற்கு சைதாப்பேட்டை
சென்னை ஆண்கள் மேனிலைப் பள்ளி மேற்கு சைதாப்பேட்டை
சென்னை மேனிலைப் பள்ளி சி.ஐ.டி. நகர், நந்தனம்
சென்னை மேனிலைப் பள்ளி மேற்கு மாம்பலம்
சென்னை மேனிலைப் பள்ளி தரமணி
சென்னை மேனிலைப் பள்ளி வேளச்சேரி
சென்னை மேனிலைப் பள்ளி ஆழ்வார் பேட்டை
சென்னை மேனிலைப் பள்ளி லாயட்ஸ் சாலை, ராயப்பேட்டை
சென்னை மேனிலைப் பள்ளி கல்யாணபுரம், வியாசர்பாடி
சென்னை மேனிலைப் பள்ளி திருவாண்மையூர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னைப்_பள்ளிகள்&oldid=2751500" இருந்து மீள்விக்கப்பட்டது