உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னைத் தொழிலாளர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னைத் தொழிலாளர் சங்கம் (Madras Labour Union)[1] என்பது இந்தியாவில் முதன்முதலாக நிறுவப்பட்ட தொழிற்சங்கம் ஆகும். இச்சங்கம் 1918 ஆம் ஆண்டு ஏப்பிரல் 4-ஆம் நள் சென்னை பக்கிங்காம் மற்றும் கர்னாடிக் மில் தொழிலாளர்களின் நலனுக்காக பி. பி. வாடியா, திரு. வி. கலியாணசுந்தரனார் ஆகியோர் தலைமையில் நிறுவப்பட்டது.[2][3] 1931 ஆம் ஆண்டில் சென்னைத் தொழிலாளர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் திறக்கப்பட்டது. திரு. வி. க. சங்கத்திற்குத் தலைவராகவும், பின்னர் கௌரவத் தலைவராகவும் அவர் 1953 இல் இறக்கும் வரை பணியாற்றினார். அவருக்குப் பின்னர் எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை தலைவராகவும், எஸ். பக்கிரிசாமிப் பிள்ளை பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர்.[4]

வேலை நிறுத்தப் போராட்டம்

[தொகு]

தொழிலாளர் சங்கம் தொடங்கிய மூன்றாம் ஆண்டில் பக்கிங்காம் மற்றும் கர்னாடிக் மில் தொழிலாளர்கள் பணிக்கொடை மற்றும் அரிசிப் படி கோரிக் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆலை நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கவில்லை. எனவே 1921ஆம் ஆண்டில் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தனர்.[5]

பி & சி ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சென்னை தொழிலாளர் சங்கத் தலைவர் திரு. வி. கலியாணசுந்தரனார் தலைமை தாங்கினார்.[6] இந்திய தேசிய காங்கிரசு தலைவர் இராஜாஜி 10 சூலை 1921 அன்று பி & சி தொழிலார்களின் போராட்டத்திற்கு ஆதரளித்தார்.

வேலைநிறுத்தம் ஆறு மாதங்களுக்கு நீடித்தது. 29 ஆகஸ்டு 1921 அன்று, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் 1 பெண் உள்பட 6 ஆண் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.[7] அனைத்து நீதிக் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பி & சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கினர்.

இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட பட்டியல் சமூகத் தொழிலாளர்கள் மற்றும் கிருத்துவத் தொழிலாளர்கள் பசிக் கொடுமையால் வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து விலகி மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

இதனால்  சாதி இந்துக்கள் மற்றும் பட்டியல் சமூகத் தொழிலார்கள் & இந்தியக் கிறிஸ்தவர்கள் இடையே மோதல்கள் உருவானது.[8] 1923ல் பட்டியல் சமூகத் தலைவர் எம். சி. இராஜா  நீதிக் கட்சியுடனான தன் உறவை முழுமையாக துண்டித்துக் கொண்டார்.

இந்த வேலைநிறுத்தம் இறுதியில் 29 ஆகஸ்டு 1921 அன்று சி. நடேச முதலியாரின் மத்தியஸ்தம் மூலம் முடிவடைந்தது. ஒரு சிலரைத் தவிர, ஆலை நிர்வாகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோரை மீண்டும் பணியில் சேர்க்கவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மறக்கப்பட்ட தொழிற்சங்கம்: வரலாறு மன்னிக்காது
  2. Slater, Gilbert (1924). The Dravidian Element in Indian Culture. Ernest Benn. p. 168.
  3. இந்தியாவின் முதல் தொழிற்சங்கம்
  4. கொள்கைக்கோமான் குணக்குன்று, திராவிடன், மே 1954]
  5. Madras Labour Union’s fiercest battle
  6. "A street name unchanged". தி இந்து. December 22, 2008 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 3, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103185248/http://www.hindu.com/mp/2008/12/22/stories/2008122250770500.htm.
  7. "Ambush British in India" (PDF). த நியூயார்க் டைம்ஸ். September 2, 1921. http://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9407E5DA1439E133A25751C0A96F9C946095D6CF.
  8. Mendelsohn, Oliver; Marika Vicziany (1998). The Untouchables: Subordination, Poverty, and the State in Modern India. Cambridge University Press. p. 94. ISBN 978-0-521-55671-2.