உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னாக்கூனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூனி இறால் அல்லது சென்னாக்கூனி (Shrimp) என்பது, கடின ஓடுடைய கணுக்காலி வகையைச் சேர்ந்த இறாலைப் போன்று வளைந்த உடலை உடையது. உணர் கொம்புகள், கால்கள் போன்ற தொங்கு உறுப்புகள் இறாலில் போன்று உள்ளன. இது 2.5 செ.மீ நீளமே உள்ளதால் சிற்றிறால் என்பர்.

கூனி இறால்கள் பரவலாகவும் மிகுதியாகவும் காணப்படக்கூடியவை. வாழிடங்களைப் பொறுத்து, ஆயிரக்கணக்காண வகைகளைக் கொண்டுள்ளன. கடல், கழிமுகங்கள், ஆறுகள், ஏரிகளின் அடிப்பரப்புகளில் இவை இரை உண்ணுவதைக் காணலாம். இவற்றுள் சில வகைகள், தம்மைக் கொன்றுண்ணக்கூடியவற்றிடமிருந்து தப்புவதற்காக அடிவண்டலுக்குள் சென்று ஒளிந்து கொள்ளும் தன்மையுடையவை.[1] பொதுவாக, ஒன்று முதல் ஏழு ஆண்டுகள்வரை உயிர் வாழும்.[2] பெரும்பாலும் தனியாக இருக்கும் இவை, இனப்பெருக்கக் காலத்தில் கூட்டமாகவும் காணப்படும்[1][3]

உணவு

[தொகு]

சென்னாக்கூனி புரதம் மிகுந்த உணவாகும். இதனை உலர்த்தியும் பயன்படுத்தலாம்[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Rudloe & Rudloe (2009), pp. 15–26.
  2. "A bouillabaisse of fascinating facts about fish". National Oceanic and Atmospheric Administration-NOAA: National Marine Fisheries Service. பார்க்கப்பட்ட நாள் October 22, 2009.
  3. A. Gracia (1996). "White shrimp (Penaeus setiferus) recruitment overfishing". Marine and Freshwater Research 47 (1): 59–65. doi:10.1071/MF9960059. https://archive.org/details/sim_marine-and-freshwater-research_1996_47_1/page/59. 
  4. அறிவியல் களஞ்சியம் -- தஞ்சை பல்கலைக்கழகம் -- தொகுதி --10
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னாக்கூனி&oldid=4052474" இலிருந்து மீள்விக்கப்பட்டது