சென்னராயன்பள்ளி பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னராயன்பள்ளி பாறை ஓவியங்கள் என்பன, குடியாத்தத்துக்கு அருகில் உள்ள சென்னராயன்பள்ளி என்னும் ஊரில் உள்ள பாறை ஓவியங்களைக் குறிக்கும். இவ்வூர் சென்னராயனபள்ளி, சென்ரையன்பள்ளி போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுவது உண்டு.

இந்த ஓவியங்களில் விலங்கு உருவங்களும், மனித உருவங்களும் காணப்படுகின்றன. இவ்வோவியங்களில் பெரும்பாலானவற்றின் கருப்பொருட்கள் வேட்டை, வழிபாடு என்பன தொடர்பானவையாகக் காணப்படுகின்றன.[1] புலிமீது நிற்கும் ஒரு மனிதனும், அவனது தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டமும் ஒரு ஓவியத்தில் காணப்படுகின்றன. இது புலியோடு போரிட்டு இறந்த வீரனைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[2] மனிதர் குதிரை மீது அமர்ந்த நிலையில் உள்ள ஓவியங்களும் இங்கு உள்ளன. இங்குள்ள ஓவியங்களில் பெரும்பாலானவை கோட்டுருவ ஓவியங்களாகும்.

இந்த ஓவியங்கள் தொல்பழங்காலத்தைச் சேர்ந்தவை அல்ல என்று இந்த ஓவியங்களை ஆய்வுசெய்த இராசு பவுன்துரை கருதுகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 95
  2. துரைசாமி, ப., மதிவாணன், இரா., 2010, பக். 175
  3. பவுன்துரை, இராசு., 2001, பக். 95

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.
  • Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]