உள்ளடக்கத்துக்குச் செல்

சென்ட்ரார்கைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்ட்ரார்கைடீ
சென்ட்ராக்கசு மாக்குரோதெரசு (Centrarchus macropterus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
சென்ட்ரார்கைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

சென்ட்ரார்கைடீ எல்லை

சென்ட்ரார்கைடீ (Centrarchidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தின் பெயர் சென்ட்ரார்கசு (Centrarchus) என்னும் பேரினத்தின் பெயரைத் தழுவியது. இப் பேரினத்தில் செ. மாக்குரோடெரசு (C. macropterus) என்னும் ஒரு இனம் மட்டுமேயுள்ளது. சென்ட்ரார்கைடீ குடும்பத்தில் உள்ள 27 இனங்கள் எல்லாமே வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை.

இக் குடும்பத்து மீனினங்கள் குறைந்தது மூன்று குதமுட்களைக் கொண்டிருப்பது இவற்றின் தனித்துவமான இயல்பாகும். முதுகுமுட்கள் 5 - 13 வரை இருக்கும். எனினும் பெரும்பாலானவை 10 - 12 முதுகுமுட்களைக் கொண்டவையாக இருக்கின்றன. போலிப்பூக்கள் (pseudobranch) சிறியவையாக மறைந்து காணப்படும். இக் குடும்பத்து மீன்களில் பெரும்பாலானவை 20 சதம மீட்டருக்கும் (7.9 அங்குலம்), 30 சதம மீட்டருக்கும் (12 அங்குலம்) இடைப்பட்ட நீளம் கொண்டவை. ஆனாலும், இவற்றுள் மிகச் சிறிய மீனினங்களும் உள்ளன. கரும்பட்டைச் சூரியமீன் (blackbanded sunfish) எனப்படும் மீன்கள் 8 ச.மீ (3.1 அங்) நீளம் மட்டுமே கொண்டவை. இக் குடும்பத்திலுள்ள மிகவும் நீளமான மீன்கள் ஒரு மீட்டர் (3.3 அடி) நீளம் வரை வளரக்கூடியன.

இக் குடும்பத்தில் உள்ள பல இனங்களைச் சேர்ந்த ஆண் மீன்கள் தமது வால்களினால் பள்ளம் தோண்டி அதில் இடப்படும் முட்டைகளைக் காவல் காக்கின்றன.

வகைப்பாடு

[தொகு]


இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்ட்ரார்கைடீ&oldid=1352581" இலிருந்து மீள்விக்கப்பட்டது