சென்சௌ 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்சௌ 7 செப்டம்பர் 25, 2008, அன்று 21:10க்கு ஜியுசுஅன் விண்வெளி ஏவு தளத்திலிருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. இது இரண்டாவது மனிதரை ஏற்றிச்சென்ற சீன விண்வெளிக்கலம். முன்னர் 1999 முதல் ஏவப்பட்ட நான்கு விண்கலங்களும் மனிதர்களை ஏற்றிச் செல்லாத விண்கலங்கள். இக்கலத்தில் ஜாய் ஜிகாங், லியு போமிங், ஜிங் ஹாய்பெங் மூவர் பயணம் செய்தார்கள். அதில் ஜாய் ஜிகாங் சீனர்களாலேயே செய்யப்பட்ட விண்வெளி உடையை அணிந்து கொண்டு, 22 நிமிடங்கள் விண்வெளியில் நடை பயின்று, விண்வெளியில் நடந்த முதல் சீனர் என்ற பெயர் பெற்றார்.

இருந்த மூன்று நாள்களில் பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பூமியை வலம் வந்த பின், செப்டம்பர் 28, 2008 17:37 உலக நேரத்தின் படி, உள் மங்கோலியாவில் தரை இறங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்சௌ_7&oldid=1463682" இலிருந்து மீள்விக்கப்பட்டது