உள்ளடக்கத்துக்குச் செல்

சென்குடு வான்சேவை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்குடு வான்சேவை
Chengdu Airlines
成都航空'
IATA ICAO அழைப்புக் குறியீடு
EU UEA HIBISCUS CITY
நிறுவல்2004
மையங்கள்சென்குடு சிகுவான்ங்லியூ விமான நிலையம் (CTU)
வானூர்தி எண்ணிக்கை16
சேரிடங்கள்27
தலைமையிடம்செங்டூ, சீனா
முக்கிய நபர்கள்Li Jining
வலைத்தளம்http://www.ueair.com/ and http://www.chengduair.cc/

சென்குடு வான்சேவை நிறுவனம் (Chengdu Airlines) என்பது சிகுவான் வான்சேவை நிறுவனத்தின் துணை வான்சேவை நிறுவனயாகும். இதன் தலைமையகம் சீனாவில் செங்டூவில் அமைந்துள்ளது. இது உள்ளூர் விமான சேவைகளை சென்குடு சிகுவான்ங்லியூ விமான நிலையத்திருந்து நடத்துகிறது. சனவரி 23 இந்த விமான நிறுவனம் சென்குடு எயர்லைன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னைய பெயர் யுனைட்டட் ஈகிள் எயர்லைன்ஸ் ஆகும்.

வரலாறு

[தொகு]

2004 இல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் முதலாவது விமானம் எயர்பஸ் ஏ320 சூலை 2005 இல் வழங்கப்பட்டது.[1] மார்ச் 2009 இல், சிகுவான் வான்சேவை நிறுவனம் 200 மில்லியன் ரென்மின்பி பணத்தை யுனைட்டன் ஈகிள் எயர்லைன்சில் முதலிட்டதுடன், மொத்த பங்குகளில் 76 வீதத்தை தன்வசமாக்கிக்கொண்டது.

2009 இன் கடைசிகளில் சிகுவான் வான்சேவை நிறுவன குழுமம் யுனைட்டட் எயர்லைன்சில் தான் வைத்திருந்த பங்குகளைக் குறைக்குமுகமாக, தனது பங்குகளை வேறு குழுமத்திற்கு இற்கு விற்றது. இந்த புதிய கைமாற்றத்தின் மூலம் யுனைட்டட் எயர்லைன்ஸ் தன்னைத் திடமாகப் பதித்துக் கொண்டதுடன் "ARJ21s" விமானத்தை கொள்வனவு செய்யவும் ஆயத்தம் செய்தது.

தற்போது செங்குடு வான்சேவை நிறுவனம் எயர்பஸ் ஏ320 இரக விமானங்களை வைத்திருப்பதுடன் அவற்றை உள்ளூர் பாதைகளில் செங்டூவில் இருந்து இயக்குகின்றது.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "United Eagle Airlines fleet details". பார்க்கப்பட்ட நாள் 29 July 2013.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chengdu Airlines
என்பதில் ஊடகங்கள் உள்ளன.