செனீக்கா இளையவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லூசியஸ் அன்னேயஸ் செனீக்கா
செனீக்காவின் பண்டைய மார்பளவு சிலை
முழுப் பெயர்லூசியஸ் அன்னேயஸ் செனீக்கா
பிறப்புc. 4 கி.மு
குர்துபா, ஹிஸ்பானியா பேட்டிகா
இறப்புகி.பி 65 (அகவை 68–69)
உரோம்
பிற பெயர்கள்Seneca the Younger, Seneca
காலம்ஹெலனிஸ்டிக் மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
சிந்தனை மரபுகள்உறுதிப்பாட்டுவாதம்
முக்கிய ஆர்வங்கள்நன்னெறி

லூசியஸ் அன்னேயஸ் செனீக்கா தி யங்கர் (Lucius Annaeus Seneca the Younger, c. 4 BC – கி.பி. 65), [1] பொதுவாக செனீக்கா என்று அழைக்கப்படுபவர், ஒரு உரோமானிய உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளர், அரசியல்வாதி, நாடகாசிரியர் ஆவார்.

செனிகா ஹிஸ்பானியாவில் உள்ள குர்துபாவில் பிறந்தார், உரோமில் வளர்ந்தார். அங்கு இவர் சொல்லாட்சி மற்றும் மெய்யியலில் பயிற்சி பெற்றார். இவரது தந்தை செனீக்கா மூத்தவர், இவரது அண்ணன் லூசியஸ் ஜூனியஸ் காலியோ அன்னியானஸ், மற்றும் இவரது மருமகன் கவிஞர் லூகான் ஆவார். கி.பி 41 இல், செனீக்கா பேரரசர் குளாடியசினால் கோர்சிகா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். [2] ஆனால் நீரோவின் ஆசிரியராக பணிபுரிய 49 இல் திரும்ப அனுமதிக்கப்பட்டார். 54 இல் நீரோ பேரரசராக ஆனபோது, செனீக்கா அவரது ஆலோசகராக ஆனார். மேலும் பிரிட்டோரியன் தலைவரான செக்ஸ்டஸ் அஃப்ரானியஸ் பர்ரஸுடன் சேர்ந்து, நீரோவின் ஆட்சியின் முதல் ஐந்து ஆண்டுகளில் திறமையான அரசாங்கத்தை வழங்கினார். நீரோ மீதான செனீக்காவின் செல்வாக்கு காலப்போக்கில் குறைந்துவிட்டது, மேலும் 65 இல் நீரோவை படுகொலை செய்ய பிசோனிய சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டதால் செனீக்கா தனது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதில் அவர் நிரபராதியாகவும் இருந்திருக்கலாம். [3] இவரது துன்பத்தை சகித்த, அமைதியான தற்கொலை பல ஓவியங்களுக்கு கருப்பொருளாக இருந்துள்ளது.

ஒரு எழுத்தாளராக செனீக்கா தனது மெய்யியல் படைப்புகளுக்காகவும், நாடகங்களுக்காகவும் அறியப்படுகிறார். இவரது நாடகங்கள் அனைத்தும் துன்பியல் நாடகங்கள் ஆகும். இவரது உரைநடை படைப்புகளில் ஒரு டசன் கட்டுரைகள் மற்றும் தார்மீக சிக்கல்களைக் கையாளும் நூற்று இருபத்து நான்கு கடிதங்கள் உள்ளன . இந்த எழுத்துக்கள் பண்டைய உறுதிப்பாட்டுவதத்திற்கான முதன்மையான நூல்களில் ஒன்றாகும். ஒரு துன்பியல் நாடக ஆசிரியர் என்ற முறையில், இவர் மீடியா, தைஸ்டெஸ், ஃபீத்ரா போன்ற நாடகங்களுக்காக மிகவும் பிரபலமானவர். பிற்கால தலைமுறைகளில் செனீக்காவின் செல்வாக்கு மகத்தானதாக இருந்து போற்றபட்டார். [4]

இவுலம் இறைவன் படைப்பாகையால், மனிதன் தனக்கு விதிக்கப்பட்டதை தான் மகிழ்ச்சியுடன் ஏற்றனுபவிக்க வேண்டுமென்றும், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை விட்டுவிட வேண்டுமென்றும் இறைவனின் ஆணையை உணர்ந்து அதற்கு உடன்படுவதுதான் சிறந்த அறம் என்று இவர் போதித்தார்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. Encyclopædia Britannica, s.v. Seneca.
  2. Fitch, John (2008). Seneca. New York: Oxford University Press. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-928208-1. 
  3. Bunson, Matthew. A Dictionary of the Roman Empire. Oxford University Press. 
  4. Watling, E. F. (1966). "Introduction". Four Tragedies and Octavia. Penguin Books. பக். 9. 
  5. http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk10/html/lkk10275.htm தமிழ் கலைக்களஞ்சியம்,

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனீக்கா_இளையவர்&oldid=3080447" இருந்து மீள்விக்கப்பட்டது