செனான் அறுபுளோரைடு
|
| |||
| இனங்காட்டிகள் | |||
|---|---|---|---|
| 13693-09-9 | |||
| ChemSpider | 123066 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 139546 | ||
| |||
| UNII | WXC3I4P46T | ||
| பண்புகள் | |||
| XeF6 | |||
| வாய்ப்பாட்டு எடை | 245.28 கி மோல்−1 | ||
| அடர்த்தி | 3.56 கி செ.மீ−3 | ||
| உருகுநிலை | 49.25 °C (120.65 °F; 322.40 K) | ||
| கொதிநிலை | 75.6 °C (168.1 °F; 348.8 K) | ||
| வினைபுரியும் | |||
| வெப்பவேதியியல் | |||
| Std enthalpy of formation ΔfH |
−294 கிலோயூல்·மோல்−1[1] | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
செனான் அறுபுளோரைடு (Xenon hexafluoride) என்பது XeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனான் எக்சாபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. சோதனை ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட செனானின் மூன்று இருமபுளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். மற்ற இரண்டு புளோரைடுகள் XeF2 மற்றும் XeF4 என்பனவாகும். இவை அனைத்தும் ஆற்றல் வெளியிடும் மற்றும் சாதாரண வெப்பநிலையில் நிலையானவை. XeF6 என்பது இந்தத் தொடரின் வலிமையான புளோரினேற்றும் முகவர் ஆகும். இது ஒரு நிறமற்ற திடப்பொருளாகும். உடனடியாக தீவிர மஞ்சள் நிற ஆவியாக இது பதங்கமடைகிறது.
தயாரிப்பு
[தொகு]6 மெகாபாசுக்கல் (60 வளிமண்டலங்கள்) அழுத்தத்தில் புளோரின் கீழ் XeF2 சேர்மத்தை சுமார் 300 °செல்சியசு வெப்பநிலையில் சூடாக்குவதன் மூலம் செனான் அறுபுளோரைடை தயாரிக்கலாம். இருப்பினும், NiF2 சேர்மத்தை வினையூக்கியாகக் கொண்டு, இந்த வினையை 1:5 விகிதம் வரை குறைந்த செனான்-புளோரின் மோலார் விகிதங்களில் கூட நிகழ்த்தி 120 °செல்சியசு வெப்பநிலையில் தயாரிக்கமுடியும்.[2][3]
கட்டமைப்பு
[தொகு]XeF2 மற்றும் XeF4 சேர்மங்களுக்கு மாறாக XeF6 இன் கட்டமைப்பை நிறுவ பல ஆண்டுகள் ஆனது. வாயுநிலையில் இது ஓர் ஒற்றை மூலக்கூறாகும். இணைதிறன் கூடு எலக்ட்ரான் சோடி தள்ளுகைக் கொள்கை, ஆறு புளோரைடு ஈந்தணைவிகள் மற்றும் ஒரு தனி சோடி எலக்ட்ரான்கள் இருப்பதால், இந்த அமைப்பு சரியான எண்முக சமச்சீர்மையைக் கொண்டிருக்கவில்லை என்று கணித்துள்ளது. மேலும், உண்மையில் உயர் மட்ட கணக்கீடுகளுடன் இணைந்த எலக்ட்ரான் விளிம்பு விளைவு சேர்மத்தின் இடக்குழு C3v என்பதைக் குறிக்கிறது. இது ஒரு நிலைப்புத்தன்மையற்ற மூலக்கூறாகும். எண்முக சமச்சீர்மை என்பது மிகக் குறைவாகவே அதிகமாக உள்ளது, இதனால் ஆற்றல் மேற்பரப்பில் குறைந்தபட்ச அளவு மிகவும் ஆழமற்றது என்பதைக் குறிக்கிறது.[4]
129Xe மற்றும் 19Fஆகியவற்றின் அணுக்கரு நிறமாலையியல், கரைசலில் சேர்மம் ஒரு நான்கு மூலக்கூற்று அமைப்பைப் பெறுகிறது என்பதைக் குறிக்கிறது: நான்கு சமமான செனான் அணுக்கள் ஒரு நான்முகியில் அமைக்கப்பட்டிருக்கின்றன, அவை 24 புளோரின் அணுக்களின் ஏற்ற இறக்கமான வரிசையால் சூழப்பட்டுள்ளன. இவை பற்சக்கரப் பொறிமுறையில் நிலைகளை மாற்றுகின்றன.
XeF6 இன் ஆறு உருவங்கள் அறியப்படுகின்றன.[5] இதில் ஒன்று F− அயனிகளுடன் பாலம் அமைக்கும் XeF+5 அயனிகளைக் கொண்டுள்ளது.[6]
வினைகள்
[தொகு]நீராற்பகுத்தல்
[தொகு]செனான் அறுபுளோரைடு நீராற்பகுப்புக்கு உட்பட்டு செனான் மூவாக்சைடை கொடுக்கிறது.:[7]
- XeF6 + H2O → XeOF4 + 2 HF
- XeOF4 + H2O → XeO2F2 + 2 HF
- XeO2F2 + H2O → XeO3 + 2 HF
- XeF6 + 3 H2O → XeO3 + 6 HF
XeF6 என்பது ஒரு இலூயிசு அமிலமாகும். இது ஒன்று மற்றும் இரண்டு புளோரின் எதிர்மின் அயனிகளை பிணைக்கிறது:
- XeF6 + F− → XeF−
7 - XeF−
7 + F− → XeF2−
8
ஆக்டாபுளோரோசெனேட்டுகள்
[தொகு]ஆக்டாபுளோரோசெனேட்டு(VI) எதிர்மின் அயனியின் (XeF2−8) உப்புகள் மிகவும் நிலையானவை. 400 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மட்டுமே இவை சிதைவடைகின்றன.[8][9][10] இந்த அயனி அதன் நைட்ரோசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு உப்பின் ((NO)2XeF8) ஒற்றை-படிக எக்சு-கதிர் எதிர் பகுப்பாய்வின் அடிப்படையில், சதுர எதிர்ப்பட்டக வடிவவியலைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.[11] சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உப்புகள் நேரடியாக சோடியம் புளோரைடு மற்றும் பொட்டாசியம் புளோரைடு உப்புகளிலிருந்து பெறப்படுகின்றன.:[10]
- 2 NaF + XeF6 → Na2XeF8
- 2 KF + XeF6 → K2XeF8
இவை சீசியம் மற்றும் ரூபிடியம் உப்புகளை விட வெப்ப ரீதியாக குறைந்த நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். முதலில் எப்டாபுளோரோசெனேட்டு உப்புகளை உருவாக்குவதன் மூலம் இவை ஒருங்கிணைக்கப்படுகின்றன:
- CsF + XeF6 → CsXeF7
- RbF + XeF6 → RbXeF7
பின்னர் இவை முறையே 50 °செல்சியசு மற்றும் 20 °செல்சியசு வெப்பநிலையில் வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு மஞ்சள் [12] நிறத்தினாலான ஆக்டாபுளோரோசெனேட்டு [8][9][10]உப்புகளை உருவாக்குகின்றன:[11]
- 2 NaF +XeF6 → Na2XeF8
- 2 KF + XeF6 → K2XeF8
இந்த உப்புகள் நீரால் நீராற்பகுப்பு செய்யப்பட்டு, செனான் மற்றும் ஆக்சிசனைக் கொண்ட பல்வேறு தயாரிப்புகளை உருவாக்குகின்றன.
செனானின் மற்ற இரண்டு இருமப் புளோரைடுகள் புளோரைடுடன் அத்தகைய நிலையான கூட்டுப் பொருட்களை உருவாக்குவதில்லை.
புளோரைடு ஏற்பிகளுடன்
[தொகு]RuF5 மற்றும் BrF3·AuF3 போன்ற வலுவான புளோரைடு ஏற்பிகளுடன் வினைபுரிந்து XeF+5 நேர்மின் அயனியை உருவாக்குகிறது:
- XeF6 + RuF5 → XeF5+RuF6−
- XeF6 + BrF3·AuF3 → XeF5+AuF4− + BrF3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A23. ISBN 978-0-618-94690-7.
- ↑ Melita Tramšek; Boris Žemva (December 5, 2006). "Synthesis, Properties and Chemistry of Xenon(II) Fluoride". Acta Chim. Slov. 53 (2): 105–116. doi:10.1002/chin.200721209. http://acta.chem-soc.si/53/53-2-105.pdf. பார்த்த நாள்: July 10, 2009.
- ↑ Chernic, C. L.; Malm, J. G. (2007). "Xenon Hexafluoride". Inorganic Syntheses. Vol. VIII. pp. 258–260. doi:10.1002/9780470132395.ch68. ISBN 9780470132395.
- ↑ Seppelt, Konrad (June 1979). "Recent Developments in the Chemistry of Some Electronegative Elements". Accounts of Chemical Research 12 (6): 211–216. doi:10.1021/ar50138a004.
- ↑ Hoyer, S.; Emmler, K.; Seppelt, T. (October 2006). "The structure of xenon hexafluoride in the solid state". Journal of Fluorine Chemistry 127 (10): 1415–1422. doi:10.1016/j.jfluchem.2006.04.014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. Bibcode: 2006JFluC.127.1415H.
- ↑ James E. House (2008). Inorganic Chemistry. Academic Press. p. 569. ISBN 978-0-12-356786-4.
- ↑ Appelman, E. H.; J. G. Malm (June 1964). "Hydrolysis of Xenon Hexafluoride and the Aqueous Solution Chemistry of Xenon". Journal of the American Chemical Society 86 (11): 2141–2148. doi:10.1021/ja01065a009.
- 1 2 Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. ISBN 0-12-352651-5.
- 1 2 Riedel, Erwin; Janiak, Christoph (2007). Anorganische Chemie (7th ed.). Walter de Gruyter. p. 393. ISBN 978-3-11-018903-2.
- 1 2 3 Chandra, Sulekh (2004). Comprehensive Inorganic Chemistry. New Age International. p. 308. ISBN 81-224-1512-1.
- 1 2 Peterson, W.; Holloway, H.; Coyle, A.; Williams, M. (September 1971). "Antiprismatic Coordination about Xenon: the Structure of Nitrosonium Octafluoroxenate(VI)". Science 173 (4003): 1238–1239. doi:10.1126/science.173.4003.1238. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17775218. Bibcode: 1971Sci...173.1238P. https://archive.org/details/sim_science_1971-09-24_173_4003/page/1238.
- ↑ "Xenon". Encyclopædia Britannica. (1995). Encyclopædia Britannica Inc..
வெளி இணைப்புகள்
[தொகு]- WebBook page for XeF6 பரணிடப்பட்டது 2020-12-24 at the வந்தவழி இயந்திரம்

