செந்நாக்குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செந்நாக்குழி என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை[1] இம்னாம்பட்டி கிராமத்தின் வடபுறத்தில் செம்பாறங்கற்படுகையில் குழி அமைப்புகள் காணப்படுகிறது இவைகள்தான் செந்நாக்குழி என்று அழைக்கப்படுகிறது[2].

செந்நாக்குழி சொல் விளக்கம்[தொகு]

செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” [3] என்று அழைக்கப்படுகிறது இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாகும், தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருக்கிறது அந்த வகையில் காரணப்பெயரோடு செந்நாக்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது

சங்க கால தொடர்பு[தொகு]

இந்தக்குழிக்கு அருகாமையில் காணப்படும் பொற்பனைக்கோட்டையிலுள்ள குளத்திற்கு நீராவிக்குளம் என்றும், இந்த பாறை அமைப்பிற்கு மிக அருகிலுள்ள குளத்திற்கு பனி நாளம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது, மேற்கண்ட குளத்தின் பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துகிறது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்நாக்குழி&oldid=2724541" இருந்து மீள்விக்கப்பட்டது