உள்ளடக்கத்துக்குச் செல்

செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°10′43.85″N 101°41′8.04″E / 3.1788472°N 101.6855667°E / 3.1788472; 101.6855667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 PY16  செந்தூல் பாராட்
Rapid_KL_Logo | எம்ஆர்டி நிலையம்
செந்தூல் பாராட் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Sentul Barat MRT Station
Stesen MRT Sentul Barat
சீனம்: 西冼都
அமைவிடம்ஈப்போ சாலை, செந்தூல் கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°10′43.85″N 101°41′8.04″E / 3.1788472°N 101.6855667°E / 3.1788472; 101.6855667
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்12  புத்ராஜெயா 
நடைமேடை1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி
தரிப்பிடம்Parking இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு PY16 
வரலாறு
திறக்கப்பட்டது PY16  16 மார்ச் 2023
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
ஈப்போ சாலை எம்ஆர்டி
குவாசா டாமன்சாரா
 

புத்ராஜெயா வழித்தடம்
 
தித்திவங்சா நிலையம்
புத்ராஜெயா சென்ட்ரல்
அமைவிடம்
Map

செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sentul Barat MRT station; மலாய்: Stesen MRT Sentul Barat) என்பது மலேசியா, கோலாலம்பூர், செந்தூல், ஈப்போ சாலையில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையத்தின் அசல் பெயர் செந்தூல் வெஸ்ட் (Sentul West); பின்னர் செந்தூல் பாராட் என மாற்றப்பட்டது.

இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2022 சூன் 16 அன்று திறக்கப்பட்டது.  PY15  ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையம் நிலையத்திற்கும்;  PY17  தித்திவங்சா நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு  PY16  ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில்; செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது.

அதன் பின்னர் இந்த  PY16  செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.

நிலத்தடி கட்டுமானங்கள்

[தொகு]

நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தின் கீழ் செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் தற்போது நிலத்தடியில் அமைந்துள்ளது. 2016 மார்ச் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 15.47 பில்லியன் மதிப்பிலான கட்டுமான கட்டமைப்புகள் எம்ஆர்டி நிறுவனத்தால் எம்எம்சி-கமுடா (MMC-Gamuda) நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும்.

13.5 கிலோமீட்டர் (8.4 மைல்) நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தில், செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் தொடங்கி பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் வரையிலான நிலையக் கட்டுமானப் பணிகளும் அடங்கும்.[2][3][4] அனைத்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) திட்டத்தின் கீழ் உள்ளன. செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் 16 மார்ச் 2023-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[5][6]

2022 திசம்பர் 23-ஆம் தேதி, 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்டம் திறப்பு நிகழ்வு நடைபெறும் என்று எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் கம்போங் பத்து நிலையம் தொடங்கி புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான மற்ற எம்ஆர்டி நிலையங்களும் செயல்படத் தொடங்கின.

இருப்பினும், அசல் திட்டத்தின்படி, செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் சூலை 2022-இல் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் திறப்பு நிகழ்வு சில தாமதங்களைச் சந்தித்தது. அதன் காரணமாக திறப்புவிழா சனவரி 2023-க்கு ஒத்திவைக்கப்பட்டது.[7][8]

நிலைய அமைவு

[தொகு]
G தரை தளம் நுழைவாயில்கள் பேருந்து நிறுத்தம், வாடகை தனியார் வாகனங்கள் ஊனமுற்றவர் அணுகல்
B1 தரை தளம் நிலையத்தின் நுழைவாயில்கள் A, B, C (→) நிலைய இணைப்புவழிகளுடன் இணைப்பு. ஊனமுற்றவர் அணுகல்
B2 நிலத்தடி தளம் பயணச்சீட்டு இயந்திரங்கள், கட்டண வாயில்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஊனமுற்றவர் அணுகல்
B3
நடைமேடை
PY தெற்கு திசை 12  புத்ராஜெயா  PY41  புத்ராஜெயா சென்ட்ரல்  PY17  (தித்திவங்சா நிலையம்)
 PY41  மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
 PY15  மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
PY வடக்கு திசை 12  புத்ராஜெயா  PY04  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்  PY15  (ஈப்போ சாலை)

இந்த நிலையம் அடுக்கு நிலைகளைக் கொண்ட நிலையமாகும். புத்ராஜெயா தொடருந்து சேவைக்காக, இந்த நிலையத்தின் மேல் பகுதியில் ஒரு மைய நடைமேடை உள்ளது. அது இரண்டு துணை நடைமேடைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

நிலைய அமைவிடம்

[தொகு]

செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையத்தில் கட்டண வாகன நிறுத்துமிட வசதிகள் இல்லை. இருப்பினும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளன.

இந்த நிலையத்தின் நுழைவாயில் C-இல் ஊட்டி பேருந்து சேவையும்; நுழைவாயில் B மற்றும் நுழைவாயில் C-இல் உள்ளூர் பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது.

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 புத்ராஜெயா  — ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையம் Rapid_KL_Logo
நுழைவாயில் அமைவிடம் இலக்கு தோற்றம்
B ஈப்போ சாலை

(கெப்போங்)

ஊனமுற்றவர் அணுகல் பேருந்து போக்குவரத்து
பேருந்து (→) ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) காசிப்பிள்ளை சாலை, செல்வதுரை சாலை, காசிப்பிள்ளை கிராமம், ரிவர்வால்க் கிராமம், ரிவர்சிட்டி காண்டோமினியம், புத்ரா மெஜஸ்டிக், தி பிர்ச் கோர்ட் 28 குடியிருப்புகள்
C ஈப்போ சாலை

(கோலாலம்பூர்)

ஊனமுற்றவர் அணுகல் பேருந்து போக்குவரத்து
பேருந்து (→) ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) ககாக் சாலை, இசுட்ராச்சன் சாலை, மேற்கு செந்தூல் , தாமான் மில்லியன், கோலாலம்பூர் கலை நிகழ்ச்சிகள் மையம், செந்தூல் தொடருந்துகள் கிடங்கு செந்தூல் கொமுட்டர் நிலையம்.

பேருந்து சேவைகள்

[தொகு]
செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பேருந்து தொடக்கம் இலக்கு
T180 [9][10]  PY16  செந்தூல் பாராட் எம்ஆர்டி தாமான் டத்தோ செனு/பண்டார் பாரு செந்தூல்
151   PY08  செந்தூல் பாராட் எம்ஆர்டி பண்டார் பாரு செலாயாங் – லெபோ புடு
173   PY08  செந்தூல் பாராட் எம்ஆர்டி தாமான் ஜசா உத்தாமா – லெபோ அம்பாங் -  PY13  கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம்
190   PY08  செந்தூல் பாராட் எம்ஆர்டி மோன்ட் கியாரா–  KA05  சிகாம்புட் கொமுட்டர் - விடுதலை சதுக்கம் AG7   SP7   KJ13  மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி

காட்சியகம்

[தொகு]

ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
  2. "Awarded Contracts for MRT Putrajaya Line" [Penganugerhan Kontrak untuk MRT Laluan Putrajaya]. mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
  3. Bernama (31 March 2016). "MRT Corp awards RM15.47b works package to MGKT" (in ஆங்கிலம்). Malaysia Kini. Retrieved 10 December 2022.
  4. "MRT Corp Awards RM 15.47 billion underground work contract to MMC Gamuda KVMRT (T) Sdn Bhd" (PDF) (in ஆங்கிலம்). MMC-Gamuda. 31 March 2016. Retrieved 10 December 2022.
  5. "Suncon bags RM661m new jobs". The Malaysia Reserve (in ஆங்கிலம்). 3 April 2017. Retrieved 29 November 2022.
  6. "Awarded Contracts for MRT Putrajaya Line". mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
  7. Bernama (4 October 2021). "MRT Laluan Putrajaya Fasa 2 siap 93.52 peratus serta dijangka beroperasi Januaryi 2021". bernama.com (Bernama). https://www.bernama.com/bm/ekonomi/news_pemerkasa.php?id=2010281. 
  8. Bernama (7 June 2022). "MRT laluan Putrajaya Fasa 2 dijangka operasi tahun depan". Harian Metro (New Straits Times Press). https://www.hmetro.com.my/mutakhir/2022/06/849659/mrt-laluan-putrajaya-fasa-2-dijangka-operasi-tahun-depan-metrotv. 
  9. Farah (15 Jun 2022). "MRT Laluan Putrajaya Fasa 1 Mula Operasi Esok, Siap dengan Bas Perantara ke Stesen". Pandu Laju (in மலாய்). Retrieved 29 November 2022.
  10. "MyRapid - Bus Kiosk | T180". Rapid KL (in ஆங்கிலம்). 27 Jun 2022. Retrieved 27 June 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]