செந்துறை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செந்துரை வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செந்துறை வட்டம், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக செந்துறை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 28 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை ஆழத்தியூர், ஆனந்தவாடி, ஆசாவீரன்குடிக்காடு, ஆதனக்குறிச்சி, அயந்தத்தனூர், இரும்புளிக்குறிச்சி, குளிமாளிகை, கிளிமங்கலம், குளுமூர், முனக்கடயான், மனப்பத்தூர், சித்துடையார்,மருவத்தூர், நாகல்குழி, நக்கம்பாடி, நமங்குலம், புராணம், பெரியாக்குறிச்சி, பிலாக்குறிச்சி, பொன்பரப்பி, சன்னாசினல்லூர், செந்துறை, கிரகடம்பூர், சிறுகளத்தூர், தளவாய் வடக்கு, தளவாய் தெற்கு, துளார், உச்சினி, வஞ்சினாபுரம்

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,741 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51,140 பேர் ஆண்கள், 51,601 பேர் பெண்கள் ஆவார்கள். 1000 ஆண்களுக்கு 1009 பெண்கள் என்றுள்ளனர். மக்களின் சராசரி கல்வியறிவு 61.31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்துறை_வட்டம்&oldid=1926551" இருந்து மீள்விக்கப்பட்டது