செந்தலை சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தலை சிலம்பன்
செந்தலை சிலம்பன், கிழக்கு சிக்கிம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திம்மாலிடே
பேரினம்:
சயனோடெர்மா
இனம்:
ச. ரூபிசெப்சு
இருசொற் பெயரீடு
சயனோடெர்மா ரூபிசெப்சு
(பிளைத், 1847)

செந்தலை சிலம்பன் (சயனோடெர்மா ரூபிசெப்சு) என்பது திமாலிடே குடும்ப சிலம்பன் சிற்றினமாகும். இது கிழக்கு இமயமலையிலிருந்து வடக்கு தாய்லாந்து, லாவோஸ், கிழக்கு சீனா முதல் வியட்நாம் மற்றும் தைவான் வரை காணப்படுகிறது. இது அடர்ந்த புதர்கள் அல்லது மூங்கில் கொண்ட மிதமான காடுகளில் வாழ்கிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

இது வெளிர் ஆலிவ் நிறத்தில் பிரகாசமான செந்தலையினையும் மற்றும் முதுகினையும் கொண்டுள்ளது. இதனுடைய உடல் நீளம் 12 cm (4.7 அங்) ஆகும். இதன் எடை 7–12 g (0.25–0.42 oz) ஆகும்.

இசுடாச்சிரிசு ருபிசெப்சு என்பது 1847ஆம் ஆண்டில் எட்வர்ட் பிளைத்தினால் முன்மொழியப்பட்ட அறிவியல் பெயர் ஆகும். இது டார்ஜீலிங்கில் சேகரிக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் பெயரிடப்பட்டது.[2] பின்னர் இசுடாச்சிரிடோப்சிசு இனத்தில் வைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Cyanoderma ruficeps". IUCN Red List of Threatened Species 2016: e.T22716187A94483662. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716187A94483662.en. https://www.iucnredlist.org/species/22716187/94483662. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Blyth, E. (1847). "Notes and Descriptions of various New or Little-known Species of Birds". The Journal of the Asiatic Society of Bengal 16 (1): 428–476. https://archive.org/details/journalofasiatic161asia/page/452. 
  3. Moyle, R. G.; Andersen, M. J.; Oliveros, C. H.; Steinheimer, F. D.; Reddy, S. (2012). "Phylogeny and Biogeography of the Core Babblers (Aves: Timaliidae)". Systematic Biology 61 (4): 631–651. doi:10.1093/sysbio/sys027. பப்மெட்:22328569. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • BirdLife International (2019). "Rufous-capped Babbler Cyanoderma ruficeps".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தலை_சிலம்பன்&oldid=3509558" இலிருந்து மீள்விக்கப்பட்டது