செந்தமிழ் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செந்தமிழ் (இதழ்)

செந்தமிழ் என்பது 1902-ஆம் ஆண்டு டிசம்பர் 7 முதல் வெளிவரும் ஒரு மாத இதழ்.

வெளியீடு[தொகு]

பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கம் இதனை வெளியிட்டு வருகிறது.

உள்ளடக்கம்[தொகு]

தனி நூலாக வெளிவராத பல பழமையான தமிழ் இலக்கியங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத் தமிழ் நூல்கள் விளக்கம், தமிழ்ப் புலவர்கள் குறிப்பு, தமிழ்த் தேர்வு விபரம், பல்சுவைக் குறிப்புகளை வெளியிட்டது.

தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமே இதில் இடம் பெறும். இரணியவதைப் பரணி என்னும் நூல் அவற்றுள் ஒன்று. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தமிழ்_(இதழ்)&oldid=3295293" இருந்து மீள்விக்கப்பட்டது