செத்தியா ஆலாம்
செத்தியா ஆலாம் | |
|---|---|
| Setia Alam | |
செத்தியா ஆலாம் பேரங்காடி | |
| ஆள்கூறுகள்: 3°6′3.14″N 101°27′31.43″E / 3.1008722°N 101.4587306°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சா ஆலாம் |
| நிர்வாக மையம் | சா ஆலாம் |
| உருவாக்கம் | 2004 |
| அரசு | |
| • ஊராட்சி | சா ஆலாம் மாநகராட்சி |
| நேர வலயம் | மலேசிய நேரம் 08:00 |
| அஞ்சல் குறியீடு | 40170[1] |
| தொலைபேசி | +603-3359 |
| போக்குவரத்து | B |
| இணையதளம் | mpks |
செத்தியா ஆலாம், (மலாய்; ஆங்கிலம்: Setia Alam; சீனம்: 实达阿拉姆) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சா ஆலாம் மாநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரியம் ஆகும். இந்த நகரியம் ஓர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. 4,000 ஏக்கர் (16 கிமீ2) பரப்பளவு கொண்ட இந்த நகரியம் சா ஆலாம் மாநகராட்சியின் (MBSA) நிர்வாக வரம்பிற்குள் வருகிறது. இந்த நகரத்தின் கட்டுமானச் செலவு RM 20 பில்லியன் ஆகும். முன்பு இந்த இடம் வடக்கு அம்மோக் ரப்பர் தோட்டம் (North Hummock Estate) என்று அழைக்கப்பட்டது.[2][3]
இந்த நகரத்தில் மதுக் கடைகள், திசுக்கோகள் மற்றும் குலுக்குச்சீட்டு வணிகங்கள் போன்ற பொழுதுபோக்கு நிலையங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளன. சா ஆலாம் மாநகராட்சி அத்தகைய பொழுதுபோக்கு மையயங்களை கட்டுப்படுத்தியுள்ளது.
போக்குவரத்து
[தொகு]செத்தியா ஆலாம் பெயரைக் கொண்ட செத்தியா ஆலாம் நெடுஞ்சாலை (Setia Alam Highway) 2006 சூலை 14-ஆம் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த நகரத்தை
கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையில் (NKVE) இருந்து செத்தியா ஆலாம் நெடுஞ்சாலை வழியாக அணுகலாம்.
கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை மற்றும் கிள்ளான் மேரு சாலை வழியாகவும் செத்தியா ஆலாம் நகரை அணுகலாம். எஸ்பி செத்தியா நிறுவனத்தால் (SP Setia Berhad) இந்த நகரம் உருவாக்கப்பட்டது.
இந்த நகரியத்திற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் KD14 கிள்ளான் கொமுட்டர் நிலையம் ஆகும். இந்த நிலையம் செத்தியா ஆலாமிற்கு தெற்கே ஏறக்குறைய 7.6 கிமீ தொலைவில் உள்ளது. எதிர்கால SA18 பாசார் கிள்ளான் எல்ஆர்டி நிலையம் (Pasar Klang LRT station), இந்த நகரியத்திற்கு தெற்கே ஏறக்குறைய 6 கிமீ தொலைவில் உள்ளது. ரேபிட் கேஎல் பேருந்து
753 , செத்தியா ஆலாம் நகரியத்தை சா ஆலாம் பிரிவு 14-இன் பேருந்து மையத்துடன் இணைக்கிறது.[4]
போக்குவரத்து நெரிசல்கள்
[தொகு]
அண்மைய ஆண்டுகளில்
கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை-செத்தியா ஆலாம் சாலைச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகிவிட்டன. அதிகமான குடியிருப்பாளர்கள் செத்தியா ஆலாம் நகரத்திற்குள் குடிபெயர்ந்ததால் இந்த நெரிசல்கள் ஏற்படுகின்றன என்று அறியப்படுகிறது.
செத்தியா ஆலாம் நகரியத்தின் வடக்கு வளாகத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டதால். பண்டார் புக்கிட் ராஜா, அமான் பெர்தானா (Aman Perdana) மற்றும் மேரு போன்ற இடங்களிலிருந்து அதிகமான குடியிருப்பாளர்கள் செத்தியா ஆலாம் நகரியத்திற்குள் குடிபெயர்ந்துள்ளனர்.
மார்ச் 2023-இல் செத்தியா ஆலாம் - எக்கோ ஆர்டென்சு (Eco Ardence) சந்திப்புச் சாலை மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக MYR 7 மில்லியன் ஒதுக்கப்பட்டது. பின்னர் திசம்பர் 2023-இல் இந்தத் திட்டக் கட்டுமானம் நிறைவடைந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taman Setia Alam, Shah Alam - Postcode - 40170 - Malaysia Postcode". postcode.my. Retrieved 3 November 2025.
- ↑ "Setia Alam attracting bigger expat community". focusmalaysia.my (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-09-15. Retrieved 2024-07-27.
- ↑ Loh, Keith (2023-08-11). "Setia Alam – An Ideal Location for Investment and Young Families". HCK Capital Group (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-07-27.
- ↑ "753 : Hentian Bandar Shah Alam ~ UiTM Puncak Alam". Retrieved 11 March 2018.
- ↑ "Sime Darby Property". www.SimeDarbyProperty.com. Retrieved 15 December 2017.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Majlis Bandaraya Shah Alam
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Shah Alam
