செதிற்கல்
Jump to navigation
Jump to search
செதிற்கல் (levalloisian) என்பது மத்திய பழங்கற்கால (கி.மு. 50,000 - கி.மு. 20,000) மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களாகும். இதற்கு முன் வாழ்ந்த கீழைப் பழங்கற்கால (கி.மு. 26,00,000 - கி.மு. 50,000) மக்கள் ஒரு பாறையில் இருந்து ஒரு கல்லை உடைத்து எடுத்தும் (தழும்புரி), பின் அதை செப்பனிட்டும் (தழும்பழி) பயன்படுத்தினர். ஆனால் அக்கற்களோடு சிதறும் சிறிய கற்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். நாளடைவில் மனித சிந்தனை வளர்ந்ததால் சிதறிய கற்களிலிருந்தும் கூரிய ஆயுதங்கள் செய்யும் முறையை மனிதன் கற்றுக் கொண்டான். அதுவே செதிற்கல் ஆயுதங்களாகும்.