செண்பக வல்லி அணைக்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செண்பக வல்லி அணைக்கட்டு கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ள தடுப்பணையாகும். இது நெல்லை மாவட்டம். வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 26கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 11000 ஏக்கர் பாசனவசதி பெற்றுவந்தது.

சொக்கம்பட்டி குன்றின்  அடிவாரத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ள இந்த அணையை கட்ட வித்திட்டவர் சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கர பாண்டியன். இவர் 1733ல் திருவிதாங்கூர் மன்னர் தர்மராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒப்பந்தம் போட்டு அணையைக் கட்டினார்.[1] அணையிலிருந்து வரும் தண்ணீர் வாசுதேவநல்லூர் தலையணையை அடைந்து அங்கிருந்து ராசிங்கபேரி குலசேகர ஆழ்வார் ஆகிய இரண்டு  கால்வாய்கள் மூலம் வாசுதேவநல்லூர்,சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி வரை தண்ணீர் செல்லும். 1955ல் ஏற்பட்ட பழுதை அப்போதைய தமிழக அரசு சரிசெய்தது. பின்னர் 1967ல் இதன் சில பகுதிகள் மழை வெள்ளத்தால்  அடிக்கப்பட்ட நிலையில் பின்னர் இருமாநில அரசுகளும் சரிசெய்யவில்லை. செண்பகவல்லி அணை மீட்புக்குழுவினர் பல்வேறு சட்டப்போராட்டங்களும், அறப்போராட்டங்களும் நடத்திவருகின்றனர். செண்பகவல்லி தடுப்பணையின் அணை உடைப்பை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் கேரள அரசு அதை நிறைவேற்றவில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "செண்பகவல்லி அணையும் அணையா அரசியலும்". காலச்சுவடு. http://www.kalachuvadu.com/archives/issue-188/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D. பார்த்த நாள்: 15 October 2017. 
  2. "செண்பகவல்லி அணை உரிமை மீட்புக் குழு: விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு". தினமணி. http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/dec/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2614555.html. பார்த்த நாள்: 15 October 2017. 
தமிழ்நாடு பொதுப்பணி துறை அறிக்கை 2007